• Jul 24 2025

ஹீரோவாக அறிமுகமாகிய டிஸ்கோ சாந்தியின் மகன்!!- அடடே இவ்ளோ பெரிதாக வளர்ந்து விட்டாரா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

அந்த கால கட்டத்தில் சில்க் ஸ்மிதாவிற்கு அடுத்ததாக கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் தான் டிஸ்கோ சாந்தி .இவர் சினிமாவை விட தன் குடும்பத்தை தான் அதிக அளவில் நேசித்து வந்தார்,அதனால் அவரது குடும்பத்தில் இருந்து ஒரு நாள் கூட தனியாக வாழ்ந்ததே இல்லையாம் டிஸ்கோ சாந்தி.


 நடிகை சாந்தி தன்னுடைய சினிமா வாழ்க்கையில் நடித்த உதய கீதம், காதல் பரிசு, உரிமை கீதம், புதிய வானம், தர்மத்தின் தலைவன், வெற்றி விழா என எக்கச்சக்கமான திரைப்படங்களில் நடித்துள்ளார் . தன் கணவர் இந்த உலகை விட்டு சென்ற பின்னர் தன் நடனத்தின் மூலமாக தான் தன் மகன்களை வளர்த்து வந்தார்,


 இப்போது டிஸ்கோ சாந்தியின்  இளைய மகன் மேகம்ஷ் அர்ஜுன்-கார்த்திக் இயக்கிய ராஜ்தூத் படத்தின் மூலம் அறிமுகமாகி உள்ளார்.இப்படத்தின் டீஸர் ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது, ராஜ்தூத், பைக்கைப் பற்றிய கதையாகும், மேலும் வாகனத்தின் குரலாக சுனில் இணைக்கப்பட்டுள்ளார்.


இந்த நிகழ்வில் கலந்து கொண்ட டிஸ்கோ சாந்தி, “மேகம்ஷ் நிச்சயமாக தனது தந்தையை பெருமைப்படுத்துவார்” நடிப்பு என்பது அவருடைய மரபணுக்களில் இருக்கிறது , எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் என் மகன்! என்று கூறியுள்ளார். இப்போது சாந்தியின் மகனின்புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.



Advertisement

Advertisement