• Jul 25 2025

கணவருடன் விவாகரத்து சர்ச்சை.. காதலித்த மூன்று நடிகர்களை கழட்டிவிட்ட சினேகா..நடந்தது என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை சினேகா - நடிகர் பிரசன்னா காதலித்து கடந்த 2012ஆம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன்  திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.


சில நாட்களுக்கு முன் நடிகை சினேகாவிற்கும், பிரசன்னாவிற்கும் விரைவில் விவாகரத்து ஆகப்போகிறது என தகவல் தீயாய் பரவி இருந்தது.


ஆனால், இது உண்மையில்லை வெறும் வதந்தி தான் என்று சினேகாவால் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

நடிகை சினேகா திரையுலகில் டாப் நடிகையாக இருந்த காலகட்டத்தில் பிரபல நடிகர்களான ஸ்ரீகாந்த், ஷாம், மாதவன் ஆகியோர் சினேகாவை காதலித்ததாக சொல்லப்படுகின்றது.


ஆனால், இந்த காதல் அவர்களுக்கு கைகூடவில்லை. இதன்பின் பிரபல இயக்குநர் ஒருவருடன் திருமணம் வரை எல்லாம் சென்றாராம். ஆனால், அந்த திருமணமும் நடக்கவில்லை.


அத்தோடு இதன்பின் 2012ஆம் ஆண்டு தான் காதலித்த நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து, தற்போது இரு பிள்ளைகளுடன் செட்டிலாகி வாழ்ந்து வருகிறார். 

Advertisement

Advertisement