• Jul 24 2025

பால்கனியிலிருந்து தவறி விழுந்த திவ்யா பாரதி மரணத்தில் நீடிக்கும் மர்மங்கள்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட்டில் பேரழியாக இருந்த நடிகை திவ்யா பாரதியின் மரணத்தில் மறைந்திருக்கும் பல விஷயங்களை நடிகை குட்டி பத்மினி கூறியுள்ளார்.



அதாவது அதில பலர் திவ்யா பாரதி பற்றி அவ்வளவாக தெரியாது. இருந்தாலும் மும்பையில் அவரை பற்றி விசாரித்தேன் அவர் சொன்ன தகவல்களை நான் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.நடிகை திவ்யா பாரதி க்யூடான அழகான டால் என்று தான் சொல்ல வேண்டும் அந்த அளவுக்கு ஸ்ரீ தேவியை விட அழகு. 17வயதில் சினிமாவிற்கு வந்த திவ்யா பாரதி இரண்டே வருடத்தில் இரவு பகலாக 22 படங்களில் நடித்திருக்கிறார்.

 

தமிழ்,தெலுங்கு, இந்தி என அனைத்து மொழியிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து டாப் நடிகை என பெயர் எடுத்தார்.சினிமாவில் பிரபலமாக நடித்துக்கொண்டு இருக்கும் போதே தயாரிப்பாளரின் மகன் சாஜித் அடியட்வாலாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனால், திரைப்படங்களில் நடிக்காமல் விலகி குடும்பம் கணவன் வாழ்க்கையை தொடங்கிய திவ்யா பாரதி, மது அருந்திவிட்டு வீட்டு ஜன்னலின் அருகே அமர்ந்து கொண்டிருந்த போது தவறி விழுந்த உயிரிழந்துவிட்ட தாக சொல்லப்படுகிறது.

ஆனால், திவ்யா பாரதி தவறிவிழுந்து உயிரிழந்து இருக்க வாய்பே இல்லை என்றும், ரத்த வெள்ளத்தில் கிடந்த திவ்யா பாரதியை அருகில் இருக்கும் மருத்துவனையில் அனுமதிக்காமல் தொலைவில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதித்தது ஏன் என்றும், மனைவி இறந்த செய்தி தெரிந்தும் அவரது கணவர் தாமதமாக வந்ததற்கு என்ன காரணம் என்றும் பலவிதமான சந்தேகங்கள் திவ்யா பாரதியின் மரணத்தில் தற்போது வரை இருக்கிறது என குட்டிபத்மினி பேட்டியில் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement