• Jul 25 2025

திவ்யாவிற்கு வளைகாப்பு..யார் அதை நடத்தினார்கள் தெரியுமா..தீயாய் பரவும் வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் பிரபல சீரியல் கேளடி கண்மணி  மூலம் அறிமுகமானவர்கள் திவ்யா ஸ்ரீ, ஆர்நவ் இவர்கள் இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்ததோடு அண்மையில் திருமணம் செய்து கொண்டதாகவும் திவ்யா கர்ப்பமாக இருப்பதாகவும் புகைப்படம் வெளியிட்டிருந்தனர்.

இருப்பினும் இந்த புகைப்படம் வெளியாகிய சில நாட்களிலேயே அர்னவ் தன்னை அடித்துக் கொடுமைப்படுத்துவதாகவும் தனது குழந்தையை அழிக்க முயற்சி செய்வதாகவும் திவ்யா வீடியோ வெளியிட்டிருந்தார்.

இதனை அடுத்து அர்னவ் மீது வழக்குப் போடப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தார்.தற்பொழுது பிணையில் விடுதலை பெற்று இருக்கின்றார். இதனை அடுத்து இருவரும் தமது கெரியரில் அதிக ஈடுபாடு காட்டி  வருவதோடு சீரியலில்  தொடர்ந்து நடித்து வருகின்றனர்.



இந்த நிலையில் திவ்யா குட்டி வயிறுடன் ஒவ்வொரு வீடியோக்களையும் பகிர்ந்து வந்த நிலையில் தற்போது புதிய வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.



அதாவது அதில் சீரியல் நடிகர்கள் மற்றும் நடிகைகள் சென்று திவ்யாவிற்கு வளைகாப்பு நிகழ்வை நடத்தி பரிசில்களையும் பகிர்ந்துள்ளார்கள்.இதற்கு பலரும் தமது வாழ்த்துக்களை கூறி வருகின்றார்கள்.இதோ அந்த வீடியோ...



Advertisement

Advertisement