• Jul 26 2025

DNA ரிசல்ட் வந்திருச்சு..பாரதி அறிந்து கொண்ட உண்மை வெளியான பரபரப்பு ப்ரோமோ.. வெண்பா கொடுத்த ரியாக்‌ஷன்

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள சீரியல் தான் பாரதி கண்ணம்மா.இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உள்ளது. பாரதி தனது நண்பியான வெண்பாவின் சூழ்ச்சியை நம்பி தனது மனைவி கண்ணம்மாவைப் பிரிந்து வாழுகின்றார்.அத்தோடு வெண்பாவை திருமணம் செய்யவும் தயாராகின்றார்.

ஆனால் அதில் வெண்பாவின் சூழ்ச்சி தெரியவர, வெண்பாவுக்கு ரோஜித்துடன் திருமணம் ஆகிவிட்டது. இதனிடையே பாரதியின் இந்த முடிவால், அவரை அவரது குடும்பம் மற்றும் பாரதியிடம் வளர்ந்து வந்த குழந்தை ஹேமா அனைவருமே  வெறுத்து விட்டனர்.இது ஒரு புறம் இருக்க ஹேமாவுக்கு தனது அம்மா கண்ணம்மா தான் என்ற உண்மையும் தெரிந்து விட்டது.


இருந்தாலும் வெண்பா செய்த சூழ்ச்சியால் ஹேமா தொலைந்து விட்டார். இதனால் மொத்தக்குடும்பமும் ஹேமாவைத் தேடி அலைகின்றது.இன்னொரு பக்கம் பாரதி டி என்ஏ ரிசல்ட் வந்ததால் உண்மை அனைத்தையும் தெரிந்து கொண்டுள்ளார்.அதன்படி ஹேமா, லக்‌ஷ்மி இரண்டு குழந்தைகளுமே பாரதியின் குழந்தைகள் என மருத்துவர் கூற பாரதி அதிர்ந்துபோய் அழுகிறார்.

இதனை குறிப்பிட்டு, ரசிகர் ஒருவர் பகிர, இந்த சீரியலில் வெண்பாவாக நடிக்கும் ஃபரீனா ஆசாத், “அய்யயோ.. இந்தா வாரேன்” என தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.


ஏற்கனவே பாரதியின் டிஎன்ஏ ரிசல்டில் குழப்பத்தை விளைவித்ததும், பாரதியால் குழந்தை பெறுவதற்கான உடற்தகுதி இல்லை என அவரை குழப்பியதுமே வெண்பாதான் என்பதும், அவரது சூழ்ச்சியால்தான் பாரதி & கண்ணம்மா பிரிந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement