• Jul 25 2025

என்னது இத்தனை கோடிக்கெல்லாம் வாட்ச் இருக்கா – ஷாருக்கானின் வாட்ச்சின் விலை எவ்வளவு தெரியுமா?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகர் ஷாருக்கான். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது . அதுமட்டுமில்லாமல் இவருடைய படங்கள் எல்லாம் கோடிக்கணக்கில் வசூல் செய்து இருக்கிறது. 

மேலும், இவர் இந்தியில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டு இருக்கிறார். உலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் இவரும் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே போல இவரது படங்கள் தமிழிலும் டப் செய்து வெளியாகியிருக்கிறது.

இப்படி இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகம் முழுவது ரசிகர்களை கொண்ட ஷாருக்கான் சித்தார்த் இயக்கத்தில், தயாரிப்பாளர் யாஷ் ராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “பதான்” . இப்படத்தில் சால்மன் கான், ஹிர்திக் ரோஷன், தீபிகா படுகோன், ஜான் ஆபிராம் போன்ற பாலிவுட் சினிமாவில் பல முன்னி நடிகர்கள் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்தின் தயாரிப்பு முடிவடைந்த நிலையில் கடந்த ஜனவரி 25 ஆம் தேதி வெளியானது.

இப்படம் வெளியாவதற்கு முன்னர் படத்தின் முதல் பாடல் வந்ததில் இருந்தே பலவிதமான சர்ச்சைகள் நிலவி வந்தன. மேலும் Boycot பதான் என்றும் Boycot ஷாருக்கான் எனும் அளவுக்கு போராட்டங்கள் வெடித்தன. ஆனாலும் இப்படம் கந்த 25 ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் 800 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்து வருகிறது.  ‘பதான்’ திரைப்படம் விரைவில் ரூ.1000 கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது பதான் படத்தின் வெற்றிவிழாவிற்கு முன்னதாக எடுக்கப்பட்ட வீடியோவில் தான் அந்த சர்ச்சையான விஷயம் இருக்கிறது. அந்த வீடியோவில் தீபிகா படுகோன் மற்றும் ஹாருக்கன் இருவரும் தாங்கள் காலையில் செய்யும் தோல் பராமரிப்பு குறித்து பேசி வருகின்றனர். அப்படி பேசுகையில் ஷாருக்கான் ஒரு வெள்ளை நிற சட்டை அணிந்து நீயே நிற வாட்ச் ஒன்றை காட்டியிருக்கிறார். அந்த கடிகாரம் தான் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த கடிகாரம் குறித்து ஷாருக்கான் ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் மிகுந்த நிலையில் இருந்து குறித்து இணையத்தில் தேட ஆரம்பித்தனர். அப்படி தேடுகையில் தான் அந்த கடிகாரத்தின் விலையை பார்த்து வாயடைத்து போயுள்ளனர் நெட்டிசன்கள். இந்த கடிகாரம் குறித்து பேஷன் பிளாக்கர் சப்யாவிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் கூறுகையில் இந்த கடிகாரம் ராயல் ஓக் பெர்பெக்ச்சுவல் காலண்டர் வாட்ச் என்றும்.இதனுடைய மதிப்பு 4.98 கோடியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். 

இதனைக் கேட்டு நெட்டிசன்கள் அதிர்ச்சியில்  உறைந்து போயுள்ளனர் .மேலும் இந்த கடிகாரத்தை பற்றி இணையத்தில் தேடுகையில் இந்த கடிகாரம் நீல நிற செராமிக் பொருளால் அனைத்து என்றும் , வெள்ளை தங்கத்தினால் அதில் உள்ள முற்கள் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிய வந்துள்ளது. மேலும் இந்த வாட்சில் நாள், மாதம், வருடம் என இவை மூன்றாயும் காட்டுபடி முற்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

 மேலும் இந்த கடிகாரம் தற்போது ஷாருக்கானின் ஆடம்பர வாழ்கையில் உள்ள உடமைகளில் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement