• Sep 09 2025

எனக்கும் லட்சுமி மேனனுக்கும் affair? எங்க அப்பா என்ன செய்தார் தெரியுமா? - நடிகர் விஷால் ஓபன் டாக்!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் புரட்சித்தலைவர், புரட்சிக்கலைஞர், புரட்சித்தமிழன் என வரிசையாக அந்தந்த பட்டத்திற்கு ஏற்ப நடிகர்கள் இருக்கும் போது சினிமாவிற்கு வந்த புதிதிலேயே புரட்சித்தளபதி என்ற பட்டத்தை தனதாக்கிக் கொண்டவர் நடிகர் விஷால். அவர் பேசும் வசனங்கள் அனல் தெறிக்கும் அளவிற்கு அள்ளி வீசுவார்.


ஆரம்பத்தில் சுறுசுறுப்பான நடிகராக வலம் வந்த விஷால் இடையிலேயே பட வாய்ப்புகள் குறைந்து ஏகப்பட்ட விமர்சனத்திற்கு ஆளாகி மெண்டலாகவும் கடும் அப்செட்டில் இருந்தார் விஷால். இதைப் பற்றி அவரே மனம் திறந்து பேசியிருக்கிறார்.

அதாவது மெண்டலாகவே அவர் மிகவும் சோர்ந்து போய் தான் இருந்தாராம். அதற்காக ஒரு தெராபிஸ்ட் கூட எடுத்தாராம். மேலும் இப்படி ஒரு சைக்கார்ட்டிஸ்டிடம் போனதை பற்றி சொல்வதில் எனக்கு ஒரு பயமும் இல்லை என்றும் சினிமாவில் இருக்கும் ஒவ்வொரு கலைஞருக்கும் கண்டிப்பாக கவுன்சிலிங் கொடுக்கப்பட வேண்டும் என கூறினார்.


மேலும் இதை பற்றி நடிகர் சங்கத்திடமும் ஆலோசித்து கவுன்சிலிங் கொடுக்க முடிவு எடுக்கப்படும் என்றும் கூறினார். மேலும் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளிவரக் காத்துக் கொண்டிருக்கும் படம் மார்க் ஆண்டனி. இதை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கிறார்.

ஆக மூன்று பேருமே பேச்சுலர். அதனால் கல்யாணத்தை பற்றி எஸ்.ஜே.சூர்யாவிடம் நிறைய பேசுவாராம் விஷால். மேலும் அவரை பற்றிய கிசுகிசுக்களை பற்றியும் கூறியிருந்தார் விஷால். அதாவது விஷாலின் தந்தை கிட்டத்தட்ட 20 வருஷமாக விஷாலை பற்றி வரும் செய்தித்தாள்களை பேப்பரில் கட் செய்து ஒரு ஃபைலாக வைத்திருக்கிறாராம்.

அப்போது விஷாலுக்கும் லட்சுமி மேனனுக்கும் இடையே காதல் என்ற கிசுகிசு வந்த செய்தியையும் ஃபைல் பண்ணி வைத்திருக்கிறாராம். இதை பற்றி  விஷாலிடம் அவரது தந்தையே கேட்டாராம். என்னடா? உனக்கும் லட்சுமி மேனனுக்கும் affair ஆ என்று? அதற்கு விஷால் ‘ஐய்யோ அப்பா. அது சும்மா கிசுகிசு’ என சொல்லிவிட்டாராம்.


இருந்தாலும் என் பெயரை வைத்து எந்த செய்தி வந்தாலும் என் அப்பா அதை கிழித்து ஃபைல் பண்ணி வைத்து விடுவார் என்று கூறினார். மேலும் திருமணம் எப்பொழுது நடக்குமோ தானாக நடக்கும் என தெரிவித்தார்.





Advertisement

Advertisement