• Jul 26 2025

44வயதில் நடிகை பூமிகா தற்போது எப்படி உள்ளார் தெரியுமா..தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

ரோஜா கூட்டம் படத்தில் வரும் ‘ஆப்பிள் பெண்ணே நீ யாரோ’ என்ற பாடலின் மூலம் அனைத்து ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பிக் கொண்டவர் நடிகை தான் பூமிகா.



மேலும் இந்தப் படத்தில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து விஜய்யுடன் இணைந்து ‘பத்ரி’ திரைப்படத்தில் இயல்பான நடிப்பினை காட்டி ரசிகர்களிடம் தனக்கான இடத்தை பிடித்துக்கொண்டார். அதன் பின் ஒரு சில படங்களில் மட்டும் நடித்து வந்த பூமிகா ஒரு கட்டத்தில் திரையுலகில் இருந்து காணாமல் போய்விட்டார்.



இதன் பின்னர் திடீரென்று சூர்யாவுடன் இணைந்து ‘ஜில்லுனு ஒரு காதல்’ என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருந்தார். அதன் பிறகு தொடர்ந்து இவரின் படங்கள் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.



ஆனால் தமிழில் சினிமாவில் பூமிகாவிற்கு பட வாய்ப்பு குறைந்துள்ளதால் தெலுங்கு திரையுலகிற்கு சென்று விட்டார். எனினும் அதையடுத்து திருமணம் செய்து கொண்டார்.



திருமணத்திற்குப் பின்பு தெலுங்கில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார். மீண்டும் தமிழில் சமந்தாவின் “யு டர்ன்” திரைப்படத்தில் நடித்திருந்தார்.



இந்நிலையில் 44வயதிலும் அதே அழகுடன் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இதைப் பார்த்த ரசிகர்கள் அதற்குலைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement