• Jul 25 2025

நடிகை நயன்தாரா குழந்தைகளை எப்படி கவனிக்கிறாங்க தெரியுமா..? - விக்னேஷ் சிவன் கொடுத்த புதிய அப்டேட்

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனை 9 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் இந்த ஆண்டு இருவரும் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர்.இதனை அடுத்து 4 மாதங்களின் பின்னர் வாடகைத் தாய் முறையில் இரட்டை ஆண் குழந்தைகளையும் பெற்றனர்.

இந்த நிலையில் இருவரும் தமது கெரியரில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார். அந்த வகையில் விக்னேஷ் சிவன்  அஜித் நடிப்பில் AK62 படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்க உள்ளார்.


அதே போல் நயன்தாரா நடிக்கும் CONNECT படத்தின் சிறப்புக் காட்சி சென்னையில் நேற்று திரையிடப்பட்டது. இதில் திரையுலகினர் கலந்து கொண்டனர்.படத்தின் சிறப்புக் காட்சி முடிந்ததும் இயக்குநர் விக்னேஷ் சிவன் பத்திரிகையாளர்களை சந்தித்து பல கேள்விகளுக்கு பதில் அளித்தார். 


குறிப்பாக, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா குழந்தைகளை எப்படி கவனிக்கிறாங்க? என்று இயக்குநர் விக்னேஷ் சிவனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த விக்னேஷ் சிவன், "நல்லா பாத்துக்கிறாங்க" என பதில் அளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement