• Jul 26 2025

அனிதா சம்பத்தின் முதல் குழந்தையை பார்த்துள்ளீர்களா-வைரலாகும் புகைப்படங்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் பிக்பாஸ் வாய்ப்பு கிடைக்க அந்த வேலையை விட்டுவிட்டு பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக சென்றார்.

அவர் ஆரம்பத்தில் நல்ல பெயரை எடுத்தாலும் இறுதியில் அவர் வெளியில் வரும் போது அவரது பெயர் அதிகம் டேமேஜ் ஆகி இருந்தது என்று தான் கூற வேண்டும்.

அதன் பின் சமீபத்தில் நடந்த பிக் பாஸ் அல்டிமேட் ஓடிடி நிகழ்ச்ச்சியில் கலந்துகொண்டார். அதில் தான் சமூக வலைத்தளங்களில் சந்தித்த ட்ரோல்கள் பற்றி உருக்கமாக பேசி இருந்தார்.

அந்த நிகழ்ச்சி முடிவுக்கு வந்த நிலையில் தனது யூடியூப் சேனலில் மட்டுமே வீடியோ வெளியிட்டு வருகிறார்.இந்நிலையில் சமீபத்தில் அனிதா புது வீடு கட்டி அதன் கிரகபிரவேசத்தை நடத்தி இருந்தனர். அதற்காக அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்தது.

தற்போது அனிதாவும் அவரது கணவரும் சேர்ந்து அவர்களது சொந்த வீட்டின் டூர் வீடியோ வெளியிட்டு இருக்கின்றனர். தான் இளம் வயதில் பட்ட கஷ்டம் பற்றி அனிதா மீண்டும் குறிப்பிட்டு இருக்கிறார்.

Housing board quarters அனிதாவா, 5 வீட்டுக்கு ஒரு bathroom-னு common bathroom colonyல வாழ்ந்து பழகுன அனிதாவா, வாடகை குடுக்க முடியாம வீட்ட காலி பண்ணிட்டு காலேஜ் பார்ம்ல address sectionல என்ன எழுதுறது தெரியாம அழுத அனிதாவா, கால்ல ஓட்ட விழுந்த தேஞ்ச செருப்பு போட்டுக்கிட்டு கொதிக்கிற ரோட்டுல டூஷன் எடுக்க நடந்து போன அனிதாவா இருந்த நானும்.

ஓட்டு வீட்டுல பிறந்து வளர்ந்த பிரபாவா, ஓட்டு வீட்டு மேல ஏறி உட்கார்ந்து தரைய பார்த்து நாமளும் மாடி வச்ச வீட்டுக்கு வாடகைக்காவது போக மாட்டோமானு ஏங்குன பிரபாவா இருந்த என்னவனும், நிறைய தடைகளையும் வலிகளையும் கனவுகளையும் சுமந்து, வாழ்க்கையில எதிர்நீச்சல் போட்டு , "நேர்மையா" சம்பாதிச்ச காசுல கட்டுன எங்க கனவு இல்லம்.

மேலும் இது வீடு இல்ல! இது எங்க முதல் குழந்தை கிரகப்பிரவேசத்துக்கு எல்லாரையும் கூப்பிட முடில.இப்ப எங்க சிறிய வீட்டை உங்களுக்கும் காட்டுறோம். ஆசீர்வாதம் பண்ணுங்க என அனிதா குறிப்பிட்டு இருக்கிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement