• Jul 23 2025

நடிகை அசினின் சொத்து மதிப்பு மொத்தம் எத்தனை கோடி தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

கேரளாவில் இருந்து வந்து தமிழ் திரையுலகில் சாதித்த நடிகைகள் ஏராளம். அந்த லிஸ்டில் நயன்தாராவுக்கு அடுத்தபடியாக இருப்பவர் அசின். இவர் கடந்த 2004-ம் ஆண்டு மோகன்ராஜா இயக்கத்தில் வெளியான எம்.குமரன் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார்.

இப்படத்தில் கேரளத்து பெண்ணாகவே நடித்திருந்த அசின், முதல் படத்திலேயே தனது வசீகர நடிப்பால் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். இதையடுத்து  போக்கிரி, வரலாறு, கஜினி, தசாவதாரம் என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்து, குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக உயர்ந்தார்.


தமிழ் மட்டுமின்றி பாலிவுட்டிலும் சல்மான் கானுக்கு ஜோடியாக நடித்து அசத்தினார் அசின். இவ்வாறு டாப் நடிகையாக இருக்கும் போதே மைக்ரோமேக்ஸ் கம்பெனியின் இணை நிறுவனர் ராகுல் சர்மாவை திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

இவர் இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.அவரது பிறந்தநாளை முன்னிட்டு அசினின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அசின் மட்டுமே ரூ. 117 கோடி வரை சொத்து சேர்த்திருக்கிறாராம் என்பதும் குறிப்பிடத்தக்கது.   

Advertisement

Advertisement