• Jul 25 2025

நடிகர் விஜயகாந்தின் மொத்த சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?- இதுவரை தெரிந்திடாத தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

ரஜினிகாந்த், கமல்ஹாசன் மார்கெட் உச்சத்தில் இருந்த போது அவர்களுக்கு நிகராக போட்டியில் குதித்தவர் விஜயகாந்த். அப்போது அவரது படங்கள் எல்லாமே ஹிட் தான். விஜயகாந்தைக் கருப்பு எம்ஜிஆர் என்றும் ரசிகர்கள் செல்லமாக அழைப்பார்கள். 

எந்தவித பின்புலமும் இல்லாமல் திரை உலகில் தடம் பதித்து முன்னேறியவர் விஜயகாந்த்.இவர் இதுவரை 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.1984 ம் ஆண்டு முதல் 1994ம் ஆண்டு வரை விஜயகாந்த் கொடுத்த மெகா ஹிட் படங்கள் ஏராளம். இவருக்கு பி, சி சென்டர்களில் மவுசு அதிகம்.

அங்கு இவரது படங்கள் வந்து விட்டால் கொடி கட்டிப் பறக்கும். பாமர ரசிகர்கள் வெகுவாக விரும்புவர். காரணம் அவர்களது சாயலில் விஜயகாந்த் கருப்பாகவும் களையாகவும் இருப்பது என்று கூட சொல்லலாம். இவர் நடிகராக மட்டும் இல்லாது தயாரிப்பாளராகவும் களமிறங்கினார்.


அரசியலில் எதிர்க்கட்டி தலைவர் என்ற அளவிற்கு மளமளவென வளர்ந்து வந்த அவரது கட்சி இப்போதும் உள்ளது ஆனால் அந்த அளவிற்கு பெரிய அளவில் இல்லை.விஜயகாந்த் சமீபகாலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் வீட்டிலேயே இருக்கின்றார்.

உதவி என கேட்பவர்களுக்கு மனதார உடனே உதவும் நடிகர் விஜயகாந்த் சொத்து மதிப்பு ரூ. 45 கோடி முதல் ரூ. 50 கோடி வரை இருக்கும் கூறப்படுகிறது.மேலும் தனது கட்சித் தொண்டர்களை விஜயகாந்த் அடிக்கடி சந்தித்து வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement