• Jul 24 2025

ரஜினிகாந்தின் 170வது படத்தில் நடிக்க பஹத் பாசில் வாங்கிய சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?- சூப்பர் ஸ்டாருக்கு கம்மி போல இருக்கே?

stella / 1 year ago

Advertisement

Listen News!

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்தில், ரஜினிகாந்த், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ் குமார், சுனில், மோகன் லால் ஆகியோர் நடித்திருந்தனர்

அனிருத் இசையில் உலகையே இந்த படம் திரும்பிப் பார்க்க வைத்தது. இந்த படத்தில் மொத்த வசூல் மட்டும் 650 கோடி இருக்கும் என்று சொல்லப்படுகிறது.ஜெயிலர் படத்தின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் ஜெய்பீம் பட இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாக உள்ள தலைவர் 170 வது படத்தில் நடிக்கவுள்ளார்.


 இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவரும் நிலையில், படத்தில் நடிக்கும் நடிகர்களின் பட்டியலை படக்குழு வெளியிட்டு வருகிறது.இப்படத்தில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர் எனப் பல பிரபலங்கள் நடிக்க உள்ளனர். இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்திற்காக ரஜினிகாந்திற்கு 90 கோடி ரூபாய் வரை சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாம். பிரபல நடிகர் பகத் பாசிலுக்கு ரூபாய் 10 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement