• Jul 25 2025

படு மோசமான கவர்ச்சிக்கு... சம்பளத்தை தாறுமாறாக உயர்த்திய தீபிகா படுகோன்.. எத்தனை கோடி தெரியுமா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகை தீபிகா படுகோன். அதுமட்டுமல்லாது இவர் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து இந்தியளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகவும் வலம் வருகிறார்.


இவ்வாறு இந்திய அளவில் டாப் நடிகைகளில் ஒருவராக மாறியுள்ள தீபிகா படுகோன் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து வந்தார். இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் 2018இல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னும் பல படங்களில் நடித்து வரும் தீபிகா தற்போது கிளாமரில் உச்சக்கட்ட நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

அந்தவகையில் இவர் தற்போது பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து 'பதான்' என்ற படத்தில் நடித்துள்ளார். அப்படத்தின் Besharam Rang என்ற பாடல் இன்று வெளியானது. பலர் இந்த பாடலை ஆபாசமாக கூறி வருகின்றனர். இதனுடன் பதான் புறக்கணிப்பும் சமூக வலைதளங்களில் பயங்கர டிரெண்டாகி வருகிறது. 


அதாவது இப்போதெல்லாம் பாலிவுட்டில் தங்கள் திரைப்படங்களை ஹிட் செய்ய இதுபோன்ற பாடல்கள் வேண்டும் சில பயனர்கள் கூறி உள்ளனர். இந்நிலையில் இந்த படத்திற்காக தீபிகா 15 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்தவகையில் இந்த படத்திற்காக தீபிகா படுகோன் வழக்கமான சம்பளத்தை விட 50 சதவீதம் கூடுதல் சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement