• Jul 24 2025

அந்த மாதிரிக் காட்சிகளில் நடித்த... சன்னி லியோனின் சொத்து மதிப்பு.. எத்தனை கோடி தெரியுமா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவின் பிரபல நடிகையில் ஒருவராக இருப்பவர் சன்னி லியோன். இவர் பல ஹிந்தி படங்களில் கிளாமர் ரோல்களில் நடித்து அசத்தியுள்ளார்.இதனால் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தினை பிடித்துள்ளார் .


இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உலகம் முழுவதும் இருக்கிறது. ஹிந்தி படங்களில் கவனம் செலுத்தி வந்த இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான 'ஓ மை கோஸ்ட்' என்ற திரைப்படம் மூலம் தமிழ் திரைத்துறையிலும் என்ட்ரி கொடுத்தார்.

இவ்வாறு சினிமாவில் படு பிசியாக இருந்து வரும் இவர் வாடகைத்தாய் மூலம் மூன்று குழந்தைகளை பெற்று, தன் கணவருடன் வளர்த்து வருகின்றார். இந்நிலையில் சன்னி லியோனின் மொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி இருக்கின்றது.


அந்தவகையில் இவருக்கு 100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படுகின்றது. மேலும் ஒரு படத்திற்காக 1.2 கோடி சம்பளமாக பெற்று வரும் சன்னி லியோன், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரம்மாண்ட பங்களா, மும்பையில் ஒரு வீடு வைத்துள்ளார். அதுமட்டுமல்லாது இன்ஸ்டாகிராம், விளம்பரங்கள், பிராண்ட் அம்பாஸ்டர், சன் சிட்டி மீடியா அண்ட் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் போன்றவற்றின் மூலமாகவும் பணம் சம்பாதித்து வருகின்றார்.

Advertisement

Advertisement