• Jul 25 2025

இதுவரை லியோ படத்தின் ட்ரெய்லர் எத்தனை மில்லியன் வியூவர்ஸை பெற்றுள்ளது தெரியுமா?- செம குஷியில் படக்குழு

stella / 1 year ago

Advertisement

Listen News!

லியோ படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகிறது. விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கௌதம் மேனன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் படத்தில் நடித்திருக்கின்றனர். லோகேஷ் கனகராஜும், விஜய்யும் ஏற்கனவே இணைந்து மாஸ்டர் என்ற பிரமாண்ட ஹிட்டை கொடுத்ததால் இந்த படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

ரொம்பவே எதிர்பார்த்த லியோ ஆடியோ லான்ச் ரத்து செய்யப்பட்ட சூழலில் படத்திலிருந்து போஸ்டர்கள், இரண்டாவது சிங்கிள் வெளியானது. அவைகளுக்கு ரசிகர்கள் பக்கா ரெஸ்பான்ஸை கொடுத்தனர்.இதனை அடுத்து நேற்றைய தினம் யூடியூப் சேனலில் லியோ ட்ரெய்லர் வெளியானது. ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக இந்தப் படம் மெகா ஹிட்டாகும் என்று ரசிகர்கள் ரொம்பவே நம்பியிருக்கின்றனர். 


அதற்கேற்றபடிதான் ட்ரெய்லர் அமைந்திருப்பதாகவும் அவர்கள் சிலாகித்துவருகின்றனர்.லியோ பட டிரைலர் வெளியான 20 நிமிடத்திலேயே 1 மில்லியன் லைக்குகளை கடந்து சாதனை படைத்தது.இந்த நிலையில் இதுவரை விஜய்யின் லியோ பட ட்ரெய்லர் 27 மில்லியன் பார்வையாளர்களையும் 2.5 மில்லியன் லைக்ஸ் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என்பதும் குறி்பிடத்தக்கது.


Advertisement

Advertisement