• Jul 24 2025

வெண்ணிலா கபடிக்குழு படத்தில் சூரி எத்தனை பரோட்டா சாப்பிட்டாருன்னு தெரியுமா? அட இம்புட்டு தானா?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தின் முதல் பாகம் கடந்த மார்ச் மாதம் வெளியானது.இந்தப் படம் மூலம் முதன்முறையாக ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார் சூரி.முன்னதாக வெண்ணிலா கபடிக்குழு படத்தின் பரோட்டா காமெடி மூலம் தான் சூரி மிகவும் பிரபலமானார்.

இந்நிலையில், வெண்ணிலா கபடிக்குழு படத்தில் சூரி எத்தனை பரோட்டா சாப்பிட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தில் இடம்பெற்ற பரோட்டா காமெடி தான் சூரியை லைம் லைட்டில் கொண்டுவந்து நிறுத்தியது. மிக ஒல்லியாக இருந்த சூரி, அதிகமான பரோட்டா சாப்பிடுவதைப் போல இந்த காமெடி காட்சி எடுக்கப்பட்டிருக்கும்.

இந்த ஒரேயொரு காமெடி சீன் தான் சூரியின் சினிமா வாழ்க்கையையே புரட்டிப் போட்டது. ஆனால், உண்மையாகவே சூரிக்கு பிடிக்காத உணவு பரோட்டா தானாம். இதனை அவரே பல பேட்டிகளில் தனக்கு பரோட்டா சுத்தமாக பிடிக்காது எனக் கூறியுள்ளார். 

அதேபோல் வெண்ணிலா கபடிக்குழு படத்தின் காமெடி காட்சிக்காக மட்டுமே சூரி பரோட்டா சாப்பிட்டாராம்.வெண்ணிலா கபடிக்குழு படத்தின் அந்த குறிப்பிட்ட காமெடி காட்சியில், சூரி 50 பரோட்டாக்கள் சாப்பிடுவதை போல எடுக்கப்பட்டிருக்கும். இந்தக் காட்சியை ஒரே டேக்கில் எடுக்க சுசீந்திரன் பிளான் செய்திருந்தாராம். அதேபோல், முதலில் சூரிக்கு பதிலாக அவரை விட குண்டாக இருந்த ஹரி வைரவன் தான் நடிக்கவிருந்தாராம். இவர் சில தினங்களுக்கு முன்னர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால், ஒல்லியாக இருக்கும் ஒருவர் 50 பரோட்டா சாப்பிட்டால் தான் அது காமெடியாக இருக்கும் என, சூரியை இந்தக் காட்சியில் நடிக்க வைத்தாராம் இயக்குநர் சுசீந்திரன். இந்நிலையில், இந்த காமெடி காட்சிக்காக மொத்தம் 13 பரோட்டாக்கள் வரை சாப்பிட்டுள்ளார் சூரி. சமீபத்தில் கொடுத்த பேட்டியொன்றில் தான் சூரி இந்த தகவலை தெரிவித்துள்ளார். மேலும், பரோட்டாவே பிடிக்காத எனக்கு, இன்று அதுதான் சோறு போட்டுள்ளது எனவும் நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement