• Jul 25 2025

கேரளாவில் வாரிசு திரைப்படம் எத்தனை திரையரங்குகளில் வெளியாகிறது தெரியுமா?- அடேங்கப்பா செம குஷியில் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

முக நூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம்,ஊடகங்கள் என அனைத்தின் பார்வையும் நாளை வெளியாக உள்ள வாரிசு மற்றும் துணிவு திரைப்படத்தின் மீதே உள்ளது. இவ்விரு படங்களும் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளதால், இணையமே திக்குமுக்காடி வருகிறது.

தில் ராஜு தயாரிக்க வம்சி இயக்க விஜய் நடித்துள்ள திரைப்படம் தான் வாரிசு. சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷ்யாம் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்தின் முதல் காட்சி நாளை அதிகாலை 4 மணிக்கு வெளியாகவுள்ளது.


படத்தின் கதை என்ன என்பது நமக்கு படத்தின் ட்ரெய்லர் பார்க்கும் போதே தெரிந்திருக்கும், குடும்பம் கலந்து எமோஷ்னல் கதையாக இருக்கும் என தெரிகிறது. இதனால் ரசிகர்கள் இப்போதே படத்தை காண படு ஆர்வமாக இருக்கின்றனர்.

விஜய்க்கு சென்னையை தாண்டி கேரளாவும் அவரது கோட்டை தான். அங்கு விஜய்யின் நிறைய படங்கள் செம ஹிட்டடித்துள்ளது, தமிழக ரசிகர்களை போல கேரளாவிலும் விஜய்க்கு பெரிய கட்அவுட் வைத்து எல்லாம் அசத்தியுள்ளனர்.


தற்போது வாரிசு திரைப்படம் கேரளாவில் எத்தனை திரையரங்குகளில் வெளியாகிறது என்ற விவரம் வந்துள்ளது. அங்கு படம் 400 ஸ்கிரீன்களில் வெளியாவதாக தகவல் வந்துள்ளது இதனால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement