• Jul 25 2025

ஹுரோவாக களமிறங்கும் லோகேஷிற்கு பேசப்பட்ட சம்பளம் மட்டும் எவ்வளவு தெரியுமா?-கேட்டா ஷாக் ஆயிடுவீங்க..

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குநராக வலம் வருகிறார் லோகேஷ் கனகராஜ். தற்போது விஜயின் லியோ படத்தில் பிஸியாக இருந்து வருகிறார் லோகேஷ். இவர் எடுத்த படங்களே இவருக்கு உண்டான அங்கீகாரம். ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசமான கதை களத்தோடு மக்களை ஆச்சரியப்படுத்தியிருப்பார்.

சொல்லப்போனால் ஒரு முன்னனி நடிகருக்கு இருக்கும் அந்த மாஸை மிகவும் எளிதாக தட்டிச்சென்றார் லோகேஷ். இயக்குநராக இவ்ளோ சிறு வயதில் சாதித்த லோகேஷ் அடுத்ததாக ஹீரோவாகவும் களமிறங்க காத்துக் கொண்டிருக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவு இயக்கத்தில் லோகேஷும் அனிருத்தும் இணைந்து லீடு ரோலில் நடிக்க உள்ளனர்.


அந்தப் படத்தின் கதை , வசனம், திரைக்கதை எல்லாம் லோகேஷ் தான் பார்க்க இருக்கிறாராம். இயக்குநராக மேற்பார்வையும் லோகேஷ் தான் பார்க்க இருக்கிறாராம். இதற்கு முன்னர் ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் சிங்கப்பூர் சலூன் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் லோகேஷ் நடித்திருக்கிறாராம்.

ஆனால் ஒரு லீடு ரோலில் இந்தப் படத்தின் மூலம் தான் அறிமுகமாகிறார் லோகேஷ். ஒரு பக்கம் இசையில் சாதித்து வரும் அனிருத் தமிழ், ஹிந்தி, தெலுங்கு என பிஸியாக இருந்தாலும் அன்பறிவு இயக்கத்தில் லோகேஷுடன் நடிகராக களமிறங்குகிறார்.இதற்காக லோகேஷுக்கு பேசப்பட்ட சம்பளம் தான் இன்றைய இளம் தலைமுறை நடிகர்களை வாயடைக்க வைத்திருக்கிறது. 


இன்று விஜய் ஒரு படத்திற்காக எவ்ளோ சம்பளம் வாங்குகிறாரோ அந்த சம்பளத்தில் பாதி சம்பளம் இந்தப் படத்திற்காக லோகேஷுக்கு பேசப்பட்டிருக்கிறதாம். கிட்டத்தட்ட 50 லிருந்து 60 கோடி வரை இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த படத்தை சன்பிக்சர்ஸ் தான் தயாரிக்க இருக்கிறதாம். இந்த தகவலை சித்ரா லட்சுமணன் கூறினார்.

Advertisement

Advertisement