• Jul 26 2025

3 லட்சம் எடுத்த கதிரவன் பிக்பாஸில் 100 நாட்களுக்கு எவ்வளவு சம்பளம் பெற்றார் தெரியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் 6வது சீசனில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த நிலையில்தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இதில்  ரசிகைகளின் சாக்லெட் பாயாக இருந்தவர் தான் தொகுப்பாளர் கதிரவன். பிக்பாஸில் நுழைந்ததில் இருந்து சில வாரங்கள் அவர் இருக்கிறாரா என்பதே தெரியாமல் இருந்தது.

100 நாட்களுக்கு நடுவில் தான் விளையாடவே இவர் ஆரம்பித்தார். எல்லா போட்டிகளிலும் தரமாக விளையாடி மக்கள் பார்வைக்கு தனியாக தெரிந்தார்.

அத்தோடு கடுமையான போட்டியாளர்களுக்கு நடுவில் நன்கு போட்டிபோட்டு இப்போது 100 நாட்கள் வரை வீட்டில் இருந்துவிட்டார்.

100 நாட்கள் வீட்டில் இருந்த கதிரவன் திடீரென 3 லட்சத்திற்கு பிக்பாஸ் வைத்த பணப்பெட்டியை எடுத்து வெளியே வந்துவிட்டார். மேலும் இப்படி அவர் செய்திருக்க கூடாது என்றும் இதுதான் சரியான முடிவும் என்றும் ரசிகர்கள் கருத்துக்களை கூறிய வண்ணம் உள்ளனர்.

அத்தோடு இந்த 3 லட்சத்தை தாண்டி 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த கதிரவன் ஒரு நாளைக்கு ரூ. 20 ஆயிரம் சம்பளம் பேசப்பட்டு உள்ளே நுழைந்தாராம்.

அதன்படி அவர் கிட்டத்தட்ட ரூ. 20 லட்சம், இந்த 3 லட்ச பணப்பெட்டி என ரூ. 23 லட்சத்தோடு வெளியேறி இருக்கிறார் என்கின்றனர்.


Advertisement

Advertisement