• Jul 24 2025

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய மைனா நந்தினி பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா?-இவருக்கு தான் அதிகம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது. தழிழில் இதுவரை ஐந்து சீசன்கள் வெற்றிகரமான முடிந்துள்ள நிலையில், 6வது சீசனும் இன்னும் இரண்டு நாளில் முடிவடைய உள்ளது. சண்டை,அழுகை, நட்பு, காதல், ரொமான்ஸ் என அனைத்தும் கலந்த ஒரு சுவாரசிய கலவையாக இந்த நிகழ்ச்சி இருந்தது.

கடந்த வாரம் ஏடிகே நாமினேஷனில் சிக்கி வெளியேறிய நிலையில் பிக் பாஸ் வீட்டில் அசீம், விக்ரமன்,ஷிவின்,மைனா, கதிர்,அமுதவாணன் ஆகியோர் இருந்தனர். 100வது நாளில் பிக்பாஸ் வீட்டிற்குள் பணமூட்டை வந்ததும், 3 லட்சம் ரூபாய் பணத்துடன் கதிர் வெளியேறினார். இதையடுத்து, இரண்டாவது முறையாக வந்த பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு அமுதவாணன் வெளியேறினார்.

இவரை அடுத்து மைனா நந்தினி எமினேட் செய்யப்பட்டு வெளியேறினார்.இவர் ஒரு நாளைக்கு ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 25 ஆயிரம் வரை சம்பளம் பேசப்பட்டு உள்ளே நுழைந்துள்ளதாக கூறப்படுகிறது.இறுதியாக நுழைந்த இவர் இறுதிச் சுற்று வரை தகுதி பெற்று வந்ததற்கு ரசிகர்கள் பாராட்டியும் வருகின்றனர்.


மேலும் விக்ரமன் நிச்சயம் டைட்டிலை வெல்லுவார், அசீமுக்கு இரண்டாம் இடமும், ஷிவினுக்கு மூன்றாவது இடமும்,கிடைக்கும் எனவும் ரசிகர்கள் கூறி வருவதையும் காணலாம்.


Advertisement

Advertisement