• Jul 23 2025

பிக்பாஸ் ஷோவிலிருந்து வெளியேறிய பாவா செல்லத்துரை வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?- இத்தனை லட்சமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் நிகழ்ச்சி, தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதன் 7வது சீசன் தற்பொழுது ஒளிபரப்பாகி வருகின்றது.

மொத்தம் 18 பேருடன் தொடங்கிய இந்நிகழ்ச்சி முதல் வாரமே அனல்பறந்தது. சண்டைகளும், சர்ச்சைகளும் நிறைந்திருந்த முதல் வாரத்தின் இறுதியில் மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் குறைவான வாக்குகளை பெற்ற அனன்யா ராவ் வெளியேற்றப்பட்டார்.


இந்த நிலையில், தற்போது திடீர் டுவிஸ்ட் ஆக எழுத்தாளர் பவா செல்லதுரை இன்றைய தினம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியிருந்தார்.முதற்கட்ட தகவல்படி அவர் உடல்நலப்பிரச்சனைகள் காரணமாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த சீசனில் அவர் சொல்லிய ஒரு சில கதைகளே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதால் மிகவும் டஃப் ஆன போட்டியாளராக பவா இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் அவர் ஒரே வாரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறி உள்ளது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது.

இந்த நிலையில் .‘பவா செல்லதுரை அவர்கள் பிக்பாஸில் கலந்துகொள்ள ஒரு வாரத்திற்கு ரூ. 1 முதல் ரூ. 2 லட்சம் வரை சம்பளம் பேசப்பட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.ஒரே வாரமே பிக்பாஸ் வீட்டில் இருந்த அவருக்கு ரூ. 2 லட்சம் வரை சம்பளம் கொடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.



Advertisement

Advertisement