• Jul 26 2025

சரண்யா மோகனின் மகனா இது... எந்தளவிற்கு வளர்ந்து விட்டார் தெரியுமா.. வெளியானது புகைப்படம்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவரே சரண்யா மோகன். 'யாரடி நீ மோகினி' என்ற திரைப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்கு தங்கையாக நடித்து வந்த இவர் தன்னுடைய சேட்டையான கதாபாத்திரத்தின் மூலம் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.


அப்படத்தினைத் தொடர்ந்து 'வேலாயுதம்' என்ற திரைப்படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்து மென்மேலும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தினைப் பிடித்தார். தன்னுடைய திரைப்பயணத்தில் ஆரம்பத்தில், குழந்தை நட்சத்திரமாக தோன்றி நடித்து வந்த இவர் தன்னுடைய திறமையினால் ஒரு கட்டத்தில் ஹீரோயினாகும் அளவுக்கு முன்னேறினார்.


இவருடைய அழகான சிரிப்பும் குழந்தை முகம் மாறாத அழகும் தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொடுத்தது. இவ்வாறாக சினிமாவில் மேலும் பிரபலமாகி ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சரண்யா மோகன் திடீரென திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் செட்டிலானார். அதாவது அரவிந்த் கிருஷ்ணன் என்ற பல் மருத்துவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு தற்போது இரண்டு குழந்தைகள் இருக்கின்றது. 


மேலும் குடும்பம் குழந்தைகள் என்று பிஸியாக இருக்கும் சரண்யா மோகன் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவார். இந்நிலையில் தற்போதும் இவர் தனது மகன், மற்றும் மகளுடன் இணைந்து எடுத்த ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அவர்களுக்கு சிறுவர் தின வாழ்த்துக்களினைக் கூறி இருக்கின்றார். 


அதில் அவர் "ஒவ்வொருவருடைய வாழ்விலும் இனிமையான காலம் குழந்தைப் பருவம். அவர்களுக்குத் தகுதியான அழகிய குழந்தைப் பருவத்தைக் கொடுங்கள். உலகில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள். இந்த நாளை வரம்பற்ற மகிழ்ச்சியுடன் செலவிடுங்கள்" எனக் குறிப்பிட்டிருக்கின்றார்.


Advertisement

Advertisement