• Jul 24 2025

தீபிகா படுகோனின் இந்த ஓவர் கோட் விலை எவ்வளவு தெரியுமா?- ஷாக்கான ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவூட் சினிமாவில் 2007 ஆம் ஆண்டு வெளியான ஓம் ஷாந்தி ஓம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தான்  தீபிகா படுகோன்.முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருதையும் பெற்றார்.தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் தீபிகா படுகோன், ஏராளமான வெற்றி படங்களையும் கொடுத்துள்ளார். 


இவர் கடந்த 2018ஆம் ஆண்டு சக பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் தீபிகா படுகோன் நடிப்பில் பதான் திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்திருந்தார் தீபிகா படுகோன். இதில் படு கிளாமரான உடையில் தரிசனம் கொடுத்தார் தீபிகா படுகோன். இப்படம் சர்ச்சைகளில் சிக்கினாலும் வசூலில் வேட்டை ஆடி வருகிறது.


அவ்வப்போது ஹாட் போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து மிரட்டி வருகிறார் . இதனாலேயே அதிகம் தலைப்பு செய்திகளில் இடம் பிடித்து விடுகிறார். இந்நிலையில் ஏர்போர்ட்டில் க்ளிக்கான தீபிகா படுகோனின் ஓவர் கோட் பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. அதில் இளம் சிவப்பு மற்றும் பிங்க் நிற லென்த்தி ஓவர் கோட்டை அணிந்துள்ள தீபிகா படுகோன், படு ஒய்யாரமாக போஸ் கொடுத்துள்ளார்.


இந்த போட்டோ வைரலாகி வரும் நிலையில் தீபிகா படுகோன் அணிந்திருக்கும் கோட் மாடலையும் அதன் விலையையும் தேடி வருகின்றனர் நெட்டிசன்கள். அதன்படி தீபிகா படுகோன் அணிந்துள்ள இசபெல் மரான்ட் எட்டோய்ல் மிட்-லென்த் கோட் பருத்தியால் செய்யப்பட்டுள்ளது. இந்த கோட்டில் பிளேட் செக் பேட்டர்ன், ஃபிளாப் பாக்கெட்டுகள், கருப்பு பட்டன்கள், காலர் மற்றும் ஃபுல் ஸ்லீவ் ஆகிய இடம்பெற்றுள்ளன. இந்த கோட்டின் விலை 92,730.56 ரூபாய் என கண்டுபிடித்துள்ள நெட்டிசன்கள் இதனை வைரலாக்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement