• Jul 24 2025

ஒரு நாளில் மட்டுமே ரூ.2கோடி சம்பாதிக்கும் நடிகர் பவன் கல்யாண்.. எப்படித் தெரியுமா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

படம் வெற்றியானாலும் சரி, தோல்வியானாலும் சரி நடிகர், நடிகைகள் தங்களுடைய சம்பளத்தை அதிகரித்த வண்ணம் தான் இருக்கின்றனர். அந்தவகையில் அனைத்து மொழி நடிகர்களும் தங்களது சம்பளத்தை ஏற்றி இருப்பதாக கூறப்படுகிறது. 


இதில் குறிப்பாக புஷ்பா படம் மூலம் பிரபலமான அல்லு அர்ஜுன் இந்தி படமொன்றில் நடிக்க ரூ.125 கோடி சம்பளம் பேசி உள்ளதாக ஏற்கெனவே தகவல் வெளியாகி இருந்தன. இந்த சம்பளத்தை இயன்றளவு குறைக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் அவரை வற்புறுத்தி வருகிறார்கள். 


இவ்வாறு சம்பளம் தொடர்பான பல குற்றச்சாட்டுகளும் எழுந்து வரும் நிலையில் தற்போது பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் சினிமாவில் நடிக்க தனக்கு ஒரு நாள் சம்பளமாக ரூ.2 கோடி கிடைக்கிறது என்று தெரிவித்து உள்ளார். 


அதாவது மச்சிலிபட்டினத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பவன் கல்யாண் பேசுகையில் "நான் சினிமாவில் நடித்து நிறைய சம்பாதிக்கிறேன். குறிப்பாக ஒரு நாள் நடிக்க ரூ.2 கோடி வாங்குகிறேன். மக்களுக்கு சேவை செய்வதற்காகவே நான் அரசியலுக்கு வந்து இருக்கிறேன்'' எனக் கூறி இருந்தார்.

எது எவ்வாறாயினும் பவன் கல்யாண் சமீபத்தில் ஒரு படத்தில் 35 நாட்கள் நடிக்க ரூ.75 கோடி வாங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement