• Jul 24 2025

பேச்சுத் துணைக்கு வந்த வடிவேலு... சினிமாவில் பேசு பொருளாக மாறியது எப்படித் தெரியுமா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக இருப்பவர் வடிவேலு. எத்தனை கவலைகள், துன்பங்களோடு இருந்தாலும் இவரின் படத்தைப் பார்த்ததும் அனைவருக்குமே சிரிப்பு வந்து விடும். அந்தளவிற்கு தன்னுடைய சிறந்த நகைச்சுவைப் பாணியினால் ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்டிருக்கின்றார். 


இவ்வாறாக தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக காலடி எடுத்து வைத்த வடிவேலு தற்போது கலக்கல் நாயகனாகவும் மாறி இருக்கின்றார். அதாவது காமெடி நடிகர் என்பதைத் தாண்டி தற்போது ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகின்றார். 

இந்நிலையில் சமீபகாலமாக இவர் எந்த ஒரு படங்களிலும் பெரிதாக நடிக்காமல் இருந்து வந்தார். தற்போது மீண்டும் 'நாய்சேகர், மாமன்னன், சந்திரமுகி 2' போன்ற படங்களின் வாயிலாக ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார். இதில் 'நாய் சேகர் returns' என்ற படத்தை சுராஜ் என்பவர் வித்தியாசமான கதையம்சத்துடன் இயக்கி வருகிறார்.


மேலும் இப்படமானது டிசம்பர் 4-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. அதுமட்டுமல்லாது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பெருமளவில் தூண்டிய வடிவேலுவின் படங்களில் இப்படமும் ஒன்றாகக் காணப்படுகின்றது.

இந்நிலையில் வடிவேலு குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று தற்போது வெளியாகி இருக்கின்றது. அதாவது இன்று இந்த உச்சத்தில் இருக்க மிக முக்கிய காரணமாக இருப்பவர் ராஜ்கிரன் தான். அவர் தான் வடிவேலுவை சினிமாவில் ஒரு நடிகனாக அறிமுகம் செய்து வைத்திருக்கின்றார்.


இதுதொடர்பாக ராஜ்கிரன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறுகையில் "நான் மதுரை சென்ற போது அங்கு என் பேச்சு துணைக்கு வந்த பையன் தான் வடிவேலு. அதன் பிறகு இரண்டு வருடம் கழித்து அவர் நியாபகம் வந்து என் படத்தில் நடிக்க வைத்தேன்" என்று கூறியுள்ளார்.

அதிர்ஷ்டம் என்பது பொதுவாக அனைவருக்கும் அமைவது இல்லை. அந்த வகையில் வடிவேலுக்கு சினிமாவில் ராஜ்கிரண் வாயிலாக பெரிய ஒரு அதிர்ஷ்டம் அடித்திருக்கின்றது. பேச்சு துணைக்கு வந்த பையன் இன்று சினிமா உலகில் பேசுபொருளாக மாறி இருக்கின்றார் என்றால் அது பாராட்டக்கூடிய ஒரு விடயம் தான்.

Advertisement

Advertisement