• Jul 26 2025

வனிதாவின் 3வது கணவர் தற்போது எப்பிடி உள்ளார் தெரியுமா..புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை வனிதாவின் மூன்றாவது கணவரான பீட்டர் பாலின் தற்போதைய புகைப்படம்  வெளியாகி வைரலாகி வருகிறது.

பிரபல நடிகையாக வலம் வருபவர்  தான் வனிதா விஜயகுமார். திரையுலகில்  இருந்து ஒதுங்கியிருந்த வனிதாவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சிதான் மீண்டும் ஒரு ரீஎன்ட்ரியை கொடுத்தது. அத்தோடு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்றார் வனிதா விஜயகுமார்.

அதன்பின்னர் படங்களில் நடிக்கும் வாய்ப்பும் குவிந்து வருகிறது வனிதாவுக்கு. இதனைத் தொடர்ந்து படங்களில் பிஸியாக உள்ள நடிகை வனிதா, பிஸ்னஸ் யூட்யூப் சேனல் என்றும் கலக்கி வருகிறார். இந்நிலையில்தான் கடந்த 2020ஆம் ஆண்டு பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்தார் வனிதா.


ஏற்கனவே இரண்டு திருமணம் செய்து மூன்று குழந்தைகளை பெற்ற வனிதாவுக்கு இரண்டு திருமணமும் விவாகரத்தில் முடிந்தது.எனினும்  இதையடுத்து டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டுடன் காதல் உறவில் இருந்தார் வனிதா. பின்னர் அந்த காதலும் தோல்வியில் முடிந்தது. இதையடுத்துதான் பீட்டர்பாலை கிறிஸ்தவ முறைப்படி மூன்றாவது திருமணம் செய்தார்.


திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகளுக்கு அப்பாவான பீட்டர் பால், தனது மனைவியை விவாகரத்து செய்யாமலேயே வனிதாவை திருமணம் செய்தார். அவர்களின் திருமண போட்டோக்களும் லிப்லாக் போட்டோக்களும் இணையத்தை தெறிக்கவிட்டன. வனிதாவின் திருமணம் கடும் விமர்சனத்துக்குள்ளானது.


அத்தோடு பீட்டர் பாலின் முதல் மனைவியும் பிரச்சனை செய்ததால் வனிதாவின் திருமணம் பெரும் சர்ச்சையானது. பிரச்சனைகளை எல்லாம் சமாளித்தார் வனிதா. இருப்பினும் 3 மாதங்களிலேயே வனிதாவின் மூன்றாவது திருமணமும் முடிவுக்கு வந்தது. பீட்டர் பால் குடிப்பழக்கத்தில் இருந்து மீளாததால் அவரை பிரிந்த வனிதா வீட்டிலிருந்தும் அவரை வெளியேற்றி விட்டார்.


இவ்வாறுஇருக்கையில் நடிகை வனிதாவின் மூன்றாவது கணவரான பீட்டர் பாலின் சமீபத்திய போட்டோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் கன்னமெல்லாம் ஒட்டிப்போய் பார்க்கவே பாவமாக உள்ளார் பீட்டர் பால். பீட்டர் பாலின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கா இந்த நிலைமை என ச்சு கொட்டி வருகின்றனர்.



Advertisement

Advertisement