• Jul 25 2025

லியோ படத்தை ஸ்பெஷலாகப் பார்த்த கமல்ஹாசன்- அவர் கொடுத்த ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

வாரிசு படத்தைத் தொடர்ந்து விஜய் நடித்த லியோ, இரு தினங்களுக்கு முன்னர் வெளியானது. கடந்த பிப்ரவரி மாதம் இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கிய போதே, ரிலீஸ் தேதியையும் படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 19ம் தேதி வெளியாகும் என சொல்லப்பட்டது. அதற்கேற்ப படப்பிடிப்பை வேகமாக முடித்தார் லோகேஷ்.

லியோ, LCU-ல் இணைந்துள்ளது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது.விஜய்யுடன் த்ரிஷா, ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், சஞ்சய் தத், கெளதம் மேனன், ப்ரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், ஜார்ஜ் மரியான் என மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது.


படம்  LCU என்பதால் கமல் ஃபேன்ஸும் வெறித்தனமாக கொண்டாடி வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் அடுத்தடுத்து உருவாகவுள்ள கைதி 2, விக்ரம் 2 படங்களில் விஜய் என்ட்ரி கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில், விஜய்யின் லியோ திரைப்படத்தை கமல்ஹாசனுக்கு ஸ்பெஷலாக ஸ்க்ரீனிங் செய்யப்பட்டுள்ளது.


கமல் தனது குழுவினருடன் லியோ படத்தை பார்த்த புகைப்படங்கள் டுவிட்டரில் வைரலாகி வருகின்றன. அதேநேரம் லியோ பார்த்ததும் கமலின் ரியாக்‌ஷன் என்ன என்பது குறித்து இன்னும் தெரியவில்லை. விரைவில் கமல்ஹாசன் லியோ படத்தின் விமர்சனம் கூறுவார் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.


Advertisement

Advertisement