• Jul 25 2025

விபத்துக்குள்ளான நடிகை ரம்பாவின் மகளின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?- அவரே வெளியிட்ட வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் உனக்காக எல்லாம் உனக்காக, அருணாச்சலம், உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை ரம்பா. தமிழின் முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ள ரம்பா, தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்தவர். இந்நிலையில் கனடா நாட்டு தொழிலபதிபரை திருமணம் செய்து கொண்ட ரம்பாவுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

நேற்று குழந்தைகளை பள்ளியிலிருந்து அழைந்து சென்றபோது நடிகை ரம்பாவின் கார் எதிர்பாராதவிதமாக விபத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் ரம்பா மற்றும் அவரது குழந்தைகளுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாகவும், அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர் தப்பியதாகவும் ரம்பா தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். 


மேலும் ஒரு குழந்தைக்கு மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார். ரம்பாவின் கார் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தற்பொழுது ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். அதில் தனது நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றிகள் எனத் தெரிவித்துள்ளார். அததோடு தானும் தனது பிள்ளைகளும் பாதுகாப்பாகவும் நன்றாகவும் இருப்பதாகவும் தெரிவித்தார். இது தவிர உங்கள் அனைவரின் இறை வேண்டலுக்கும் நன்றி. தொடர்ந்தும் எங்களுக்காக கடவுளிடம் வேண்டிக் கொள்ளுங்கள். இதற்கு மேல் என்னிடம் கூற வார்த்தைகள் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். இவரின் இந்த வீடியோ வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement