• Jul 26 2025

கோமாவில் இருந்த பாடகி ஜெயஸ்ரீயின் தற்போதைய நிலமை என்ன தெரியுமா?- அவரே ரசிகர்களுக்காக போட்ட பதிவு

stella / 2 years ago

Advertisement

Listen News!


1982ஆம் ஆண்டு தன் முதல் மேடைக் கச்சேரி தொடங்கிய பாம்பே ஜெயஸ்ரீ, தற்போது வரை உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இசைக் கச்சேரிகளை நடத்தி வருகிறார்.58 வயதான பாம்பே ஜெய ஸ்ரீ, பத்மஸ்ரீ, தமிழக அரசின் கலைமாமணி விருது என ஏராளமான விருதுகனை பெற்றுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக லண்டன் சென்ற ஜெயஸ்ரீ உடல்நலன் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லண்டன் லிவர்பூல் நகர் ஹோட்டலில் தங்கி இருந்த அவர் ஹோட்டல் அறையில் இருந்து வெகு நேரமாக வெளியே வராததால், சந்தேகமடைந்து, அவரது அறைக்குச் சென்று பார்த்த போது, தலையில் காயத்துடன் சுயநினைவை இழந்து இருந்தார்.


அவரை உடனடியாக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு மூளையில் ரத்தக் கசிவு இருந்ததால், கோமா நிலையில் இருந்த பாம்பே ஜெயஸ்ரீக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும், சென்னைக்கு விமானம் மூலம் அவர் விரைவில் அழைத்து வரப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகின. இந்த தகவல் காட்டுத்தீ போல பரவியதை அடுத்து அவரது ரசிகர்கள் கவலை அடைந்த நிலையில்,அவரது குடும்பத்தினர் நலமாக இருப்பதாக அறிவித்து இருந்தனர்.

இந்நிலையில், பாம்பே முன்னதாக தன் உடல்நிலை பற்றி பாம்பே ஜெயஸ்ரீ தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், உங்கள் பிரார்த்தனை மற்றும் வாழ்த்துகளால் நான் நன்றாக உடல்நலம் தேறி வருகிறேன். தொடர்ந்து அவற்றைக் கொடுத்துக் கொண்டே இருங்கள் என பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவினைப் பார்த்த ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.


தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு பாடல்களை பாடி உள்ள ஜெயஸ்ரீ.இளையராஜா,ஏர்.ஆர் ரஹ்மான்,ஹாரீஸ் ஜெயராஜ், யுவன் சங்கர் ராஜா என அனைத்து முன்னணி இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement