• Jul 24 2025

புதிய காதல் ஜோடி அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சூது கவ்வும் என்னும் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியவர் தான் அசோக் செல்வன். இதனைத் தொடர்ந்து பீசா 2, தெகிடி, ஓ மை கடவுளே, போர் தொழில் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் இறுதியாக வெளியாகிய போர் தொழில் திரைப்படம் இவருக்கு நல்லதொரு அடையாளத்தையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

இவர் தற்பொழுது பா ரஞ்சித் தயாரிப்பில், 'ப்ளூ ஸ்டார்', 'சபா நாயகன்', மற்றும் சொந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் உருவாகும் வெப் தொடர் ஒன்றிலும் நடிக்க உள்ளார்.இவர் அண்மையில் பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியனைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.


திருமணம் செய்த அசோக் செல்வனை ரசிகர்கள் உங்களுக்கு வேறு பெண் கிடைக்கவில்லையா என சர்ச்சை கிளப்ப அவர் பேரழகியை திருமணம் செய்துகொண்டேன் என பதிலடி கொடுத்தார்.

இந்த நிலையில் நடிகர் அசோக் செல்வன் கீர்த்தி பாண்டியன் ஆகியோர் சொத்து மதிப்பு விவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படிஅசோக் செல்வன் சொத்து மதிப்பு ரூ. 10 முதல் ரூ. 15 கோடி வரை இருக்கும் கூறப்படுகிறது.

ஆனால் கீர்த்தி பாண்டியனின் தந்தை அருண் பாண்டியன் சொத்து மதிப்பு பல மடங்கு இருக்கும் என்கின்றனர். அவரது சொத்து மதிப்பு ரு. 120 முதல் ரூ. 140 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. 


Advertisement

Advertisement