• Jul 26 2025

சூப்பர் சிங்கர் சீசன் 9 இல் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட பரிசில்கள் என்னென்ன தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் நடத்தப்படும் ரியாலிட்டி ஷோக்களில் மிகவும் பிரபலமானது சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியின்  சீசன் 9 ஆனது நேற்றைய தினம் முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் வந்திருந்தார். 

இறுதிப்போட்டியில் போட்டியாளர்களின் அசத்தலான திறமையை பார்த்து ஹாரிஸ் ஜெயராஜ் வியந்து போனார்.இறுதியாக மக்கள் அளித்த வாக்குகள் அடிப்படையில் வெற்றிபெற்றவர்களின் விவரம் அறிவிக்கப்பட்டது.அதன்படி முதலாம் இடத்தை அருணா பெற்றுக் கொண்டார். அவருக்கு ரூ.60 லட்சம் மதிப்பிலான வீடு மற்றும் ரூ.10 லட்சம் பணமும் வழங்கப்பட்டது. 


இதையடுத்து தன்னுடைய தனித்துவமான குரலால் ரசிகர்களின் மனம் கவர்ந்த போட்டியாளராக வலம் வந்த பிரியா ஜெர்சன் இரண்டாம் இடம் பிடித்தார். அவருக்கு ரூ.10 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தான் இந்த பரிசுத் தொகையை வழங்கினார்.

மூன்றாம் இடம் பிரசன்னாவுக்கு கிடைத்தது. சூப்பர் சிங்கரின் பல அசத்தலான பாடல்களை பாடி இருந்த பிரசன்னாவுக்கு குறைவான வாக்குகளே கிடைத்ததன் காரணமாக அவருக்கு மூன்றாம் இடம் கிடைத்தது. அவருக்கு ரூ.5 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.


இந்த சீசனின் மூலம் சோசியல் மீடியாவில் மிகவும் டிரெண்டான போட்டியாளர் என்றால் அது பூஜா தான். அவர் நிச்சயம் பைனலில் டாப் 3-ல் ஏதாவது ஒரு இடத்தை பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரால் டாப் 3-ல் இடம்பெற முடியாமல் போனது. இதனால் பூஜாவின் ரசிகர்கள் சோகமடைந்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement