• Jul 25 2025

நடிகர் ரோபோ ஷங்கரின் உடல் எடை குறைய காரணம் என்ன தெரியுமா?- முதன் முறையாக அவரது மனைவி பகிர்ந்த தகவல்

stella / 2 years ago

Advertisement

Listen News!

சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபல்யமானவர் தான் நடிகர் ரோபோ ஷங்கர். இவர் தனுஷ் ,விஜய், அஜித் ,சிவகார்த்திகேயன், விஷால் எனப் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென அடையாளத்தை உருவாக்கி வைத்துள்ளதோடு முன்னணி காமெடி நடிகராகவும் வலம் வருகின்றார்.

இவரது மகள் இந்திரஜாவும் தற்போது சினிமாவில் காமெடி வேடங்களில் நடிக்க தொடங்கி உள்ளார். இவர் முதன்முதலில் விஜய்யின் பிகில் படத்தில் பாண்டியம்மா என்கிற கேரக்டரில் நடித்தார். இதையடுத்து கார்த்தி - அதிதி ஷங்கர் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன விருமன் படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தார். தொடர்ந்து இந்திரஜாவுக்கு சினிமாவில் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.


இப்படி தந்தையும், மகளும் சினிமாவில் பிசியாக இருப்பதை போல் சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருந்து வருகின்றனர். அந்த வகையில் அண்மையில் இந்திரஜா தனது அப்பாவுடன் சேர்ந்து ரீல்ஸ் செய்த வீடியோவை வெளியிட்டிருந்தார்.அதைப் பார்த்த ரசிகர்கள் ரோபோ ஷங்கருக்கு என்ன ஆச்சு, நோயால் ஏதும் பாதிக்கப்பட்டிருக்கின்றேரா எனக் கேட்டு வந்தனர்.


இப்படியான நிலையில் ரோபோ ஷங்கரின் மனைவி ப்ரியங்கா இந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.அதாவது ரோபோ ஷங்கருக்கு ஒரு நோயும் இல்லை. அவர் நலமாகத் தான் இருக்கின்றார்.அவர் சரியான உணவுக்கட்டுப்பாட்டுடன் தான் இருக்கின்றார். சரியான முறையில் சத்துள்ள உணவுகளை சாப்பிடுவதாலும் உடற்பயிற்சி மேற்கொள்வதாலும் தான் உடல் எடையைக் குறைத்துள்ளார். மற்றும் படி அவருக்கு எந்த நோயும் இல்லை எனத் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement