• Jul 25 2025

நடிப்பதை நிறுத்தி விட்டு டாக்டர் பணியை ஆரம்பிக்கவுள்ள சாய்பல்லவி-திடீர் முடிவுக்கு காரணம் என்ன தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை சாய் பல்லவி மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.அந்த படத்தில் அவர் நடித்த ‘மலர்’என்ற கதாபாத்திரம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றிப்பெற்றது.அதையடுத்து தமிழ் மற்றும் தெலுங்கில் பல திரைப்படங்கள் நடித்துள்ளார்.

தமிழை விட தெலுங்கு, மலையாளத்தில் அவருக்கு சிறந்த படங்களும், கதாபாத்திரங்களும் கிடைத்துள்ளன. தமிழில் அடுத்து கமல்ஹாசன் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ள படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க உள்ளார் சாய் பல்லவி. 


விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.வேறு எந்த மொழிகளிலும் புதிய படங்களை சாய் பல்லவி ஒத்துக் கொள்ளாமல் இருக்கிறார். தனது சொந்த ஊரான கோயம்பத்தூரில் சாய் பல்லவி மருத்துவமனை ஒன்றைக் கட்ட உள்ளதாக டோலிவுட்டில் செய்தி பரவி வருகிறது. 

டாக்டருக்குப் படித்து முடித்துவிட்டு இன்னும் அதற்கான பணியில் இறங்காமல் இருப்பது குறித்து சாய் பல்லவி யோசித்து வந்தாராம். எனவே, சொந்த ஊரில் மருத்துவமனை கட்டி அங்கு தனது டாக்டர் பணியை ஆரம்பிக்கும் எண்ணத்தில் இருக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது. நடித்துக் கொண்டே அந்த பணியையும் பார்ப்பாரா அல்லது சில வருடங்களில் நடிப்பை விட்டு விலகுவாரா என்பது இனிமேல்தான் தெரியும் என்றும் ரசிகர்கள் கூறி வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement