• Jul 24 2025

சைக்கிள் டாஸ்க்கில் பிக்பாஸ் போட்ட புதிய விதி- தானாகவே வெளியேறிய மைனா- காரணம் என்ன தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் Ticket To Finale சுற்று நடைபெற்று வருகின்றது. நிறைய கடினமான போட்டிகள் உள்ளிட்டவை அடுத்தடுத்து நடைபெற்று வரும் நிலையில், ஒவ்வொரு போட்டியாளரும் தங்கள் திறனை நிரூபித்தும் வருகிறார்கள். 

அந்த வகையில் தற்பொழுது  மிதிவண்டி டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. இதில் மாறி மாறி போட்டியாளர்கள் மூன்று சைக்கிள்களை இயக்க மற்ற போட்டியாளர்கள் முன்னாடியும் பின்னாடியும் மாறி மாறி ஏறிய படி இருக்கின்றனர். ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்தில் மாறி அமர்வதற்கு 10 வினாடிகள் மேல் எடுத்து கொண்டால் அவர்கள் வெளியேற்றப்படுவார்கள் 


இதில், மாறி மாறி அமர்வதை போட்டியாளர்களே திட்டம் போட்டு மாறி கொள்ளலாம் என்றும் பிக் பாஸ் அறிவிக்கிறார். மிகவும் விறுவிறுப்பாகவும், அதே வேளையில் சிறப்பான டாஸ்க்காகவும் இது அமைந்திருந்தது.இதனிடையே இந்த டாஸ்க்கில் கடைசியாக ரச்சிதா, விக்ரமன், அமுதவாணன், மைனா நந்தினி மற்றும் ஷிவின் உள்ளிட்டோர் இருக்கும் போது பிக் பாஸ் புதிய விதி ஒன்றை அறிவிக்கிறார். 

அதாவது, ஒரு Buzzer சத்தம் கேட்கும் போது ஒரு போட்டியாளர் விலக வேண்டும் என்பது தான் அந்த விதி. இதனை போட்டியாளர்களுக்குள்ளே கலந்து பேசி முடிவு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார்.அதன் அடிப்படையில் ஒரு நபரை வெளியேற்ற முடியும் என விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகியோர் கேள்வியும் எழுப்புகின்றனர். 

மறுபக்கம், சைக்கிளில் நீண்ட நேரமாக போட்டியாளர்கள் இருப்பதால் அவர்கள் சோர்ந்து போயும் உள்ளனர். அதிலும் கம்பியில் உட்கார்ந்திருக்கும் நபர்கள் உட்கார கூட முடியாமலும் டாஸ்க்கில் வெற்றி பெற வேண்டும் என அப்படியே இருக்கின்றனர்.


அப்போது, Buzzer சத்தம் கேட்பதற்கு முன்பாகவே தானாக முன் வந்து மைனா நந்தினி எழுந்து வெளியேறுகிறார். தன்னால் இதற்கு மேல் உட்கார முடியாது என்றும் கூறி மிகுந்த வேதனையுடனும் நடந்து செல்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement