• Jul 25 2025

நடிகர் ஜீவன் அட்ரெஸ் இல்லாமல் போன காரணம் தெரியுமா? ஷாக்கான ரசிகர்கள்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில்  யுனிவர்சிட்டி என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் அறிமுகமானவர் நடிகர் ஜீவன். வாட்டசாட்டமான உடல் அமைப்பு ,நல்ல உயரம் ,நல்ல நடிப்பு என சினிமாவிற்கே உரிய தகுதிகளோடு தமிழ் சினிமாவிற்குள் வந்தவர். காக்க காக்க படத்தில் சூர்யாவுக்கு படு பயங்கரமான வில்லனாக கௌதம் மேனனால் அறிமுகம் செய்யப்பட்டவர்.


எனினும் அந்தப் படம் தான் ஜீவனுக்கு ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து திருட்டுப் பயலே, நான் அவன் இல்லை 1,நான் அவன் இல்லை 2 போன்ற படங்களில் நடித்து மேலும் மக்களின் அபிமானங்களை பெற்றார். இவர் நடித்ததோ எட்டு படங்கள் தான். அந்த எட்டு படங்களுமே நல்ல விமர்சன ரீதியாக மக்களிடையே வரவேற்பை பெற்றன.


அது மட்டும் இல்லாமல் ஒரே படத்தில் எட்டு நடிகைகள் உடன் ஆட்டம் போட்ட முதல் நடிகரும் ஜீவன் தான். அத்தோடு நான் அவனில்லை படத்தில் சினேகா. நமீதா .மாளவிகா என எட்டு நடிகைகளுடன் கூலாக வந்து ஆட்டம் போட்டு மற்ற நடிகர்களின் பொறாமைக்கும் ஆளானார்.


இவர் நடித்து வெளிவராத படமான ஜெயிக்கிற குதிரை ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. நடித்துதான் தன் பொழப்பை ஓட்ட வேண்டும் என்ற நிலையில் ஜீவன் இல்லை. அவருடைய அப்பா திண்டுக்கல்லில் ஒரு மிகப்பெரிய தொழிலதிபராக இருக்கிறாராம்.


மேலும் இப்படி பலதரப்பட்ட பெருமைகளுக்கும் புகழுக்கும் சொந்தக்காரராக திகழ்ந்த நடிகர் ஜீவனை சில ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் பார்க்க முடிவதில்லை. சொல்லப்போனால் காணாமலேயே போய்விட்டார் என்று தான் கருதுகிறார்கள். எனினும் அதற்குக் காரணம் சினிமா மீது சரியான புரிதல் இல்லை ஜீவனுக்கு என்று பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.


அத்தோடு யாரிடமும் தானாக வாய்ப்பு கேட்டு நடிக்க கூடிய எண்ணம் கொண்டவர் இல்லையாம் ஜீவன். வந்த வாய்ப்புகளை மட்டும் பயன்படுத்திக் கொண்டு நடிப்பவராம். மற்ற நடிகர்களுக்கு உண்டான சில குணாதிசயங்கள் இருந்தால் கூட சினிமாவில் ஓரளவுக்கு ஜெயிக்க முடியும். ஆனால் ஜீவன் அப்படிப்பட்டவர் இல்லை என்றும் பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.


உதாரணமாக அவர் நடித்த இரண்டு படங்கள் வெளிவராமல் இருக்கின்றன. முடிந்த வரைக்கும் அவருடைய பணத்தை முதலீடாகக் கொண்டு படத்தை ரிலீஸ் செய்ய ஜீவன் உதவலாம். ஆனால் அதை செய்ய மாட்டார். இப்படி இருப்பதனாலேயே அவர் தமிழ் சினிமாவை விட்டு காணாமல் போய்விட்டார் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.

Advertisement

Advertisement