• Jul 25 2025

எல்லா மேடையிலும் அவர் லூசுப் பெண்ணே'பாடலைப் பாடுவதற்கு காரணம் என்ன தெரியுமா?- சிம்பு மனசில என்ன தான் இருக்கு

stella / 2 years ago

Advertisement

Listen News!


வல்லவன் படத்தில் நடித்த போது சிம்புவும் நயன்தாராவும் ஒருவரை ஒருவர் காதலித்தனர். அதற்கு முன் இல்லாத அளவுக்கு அந்த படத்தில் சிம்புடன் படு நெருக்கமாக நயன்தாரா நடித்திருப்பார். மேலும், சிம்பு, நயன்தாரா தனிப்பட்ட முறையில் அடித்த லிப் லாக் போட்டோக்கள் எல்லாம் இணையத்தில் கசிந்து பரபரப்பை கிளப்பியது.

ஆனால், அந்த காதல் அதிக நாட்கள் நீடிக்கவில்லை. இருவரும் பிரேக்கப் செய்து பிரிந்தனர். அதன் பின்னர் வில்லு படத்தின் போது பிரபுதேவாவை காதலித்த நயன்தாரா அவரை திருமணம் செய்ய முடிவெடுத்தார். ஆனால், பிரபுதேவாவின் முன்னாள் மனைவி செய்த பிரச்சனை காரணமாக அந்த திருமணம் நின்று போனது. அதன் பின்னர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு குழந்தைகளுடன் சந்தோஷமாக இருந்து வருகிறார்.


இன்னமும் திருமணம் செய்துக் கொள்ளாத நடிகர் சிம்பு, தொடர்ந்து தனது படங்களின் அப்டேட்கள், ரிலீஸ் தேதி என எல்லாவற்றையும் 9ம் நம்பர் வரும் படி பார்த்துக் கொள்வது தொடர்ந்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்களால் விமர்சிக்கப்பட்டும் கலாய்க்கப்பட்டும் வருகிறது. நடிகர் சிம்பு எப்போது மேடை ஏறினாலும் வல்லவன் படத்தில் நயன்தாராவை நினைத்து எழுதி பாடிய அந்த 'லூசுப் பெண்ணே' பாடலை விடுவதே இல்லை. பத்து தல இசை வெளியீட்டு விழாவில் கூட அந்த பாடலைத் தான் பாடி இருந்தார்.


 பிரபல விருது விழாவில் கூட கேபிஒய் பாலா வெந்து தணிந்தது காடு படத்தில் இருந்து 'மறக்குமா நெஞ்சம்' பாடலைத்தான் பாட சொல்லி சிம்புவிடம் கேட்டார். ஆனால், உடனடியாக 'லூசுப் பெண்ணே' பாடல் பாடணுமா? என ரசிகர்களை பார்த்து கேட்டுவிட்டு மக்கள் எதை கேட்கிறாங்களோ அதைத்தானே பாட வேண்டும் எனக் கூறி விட்டு அந்த பாடலை பாடினார்.


 சிம்பு பாடும் போது த்ரிஷா தான் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். சிம்புவுக்கு பிறகு தான் நயன்தாரா அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சிம்பு பாடும் போது அங்கே நயன்தாரா இருந்திருந்தால் இன்னும் வேறலெவலில் எடிட்டர் எடிட் செய்து பஞ்சாயத்தைக் கூட்டியிருப்பார் என நெட்டிசன்கள் தற்போது வெளியான அந்த வீடியோவை பங்கமாக கலாய்த்து வருகின்றனர். சீக்கிரமாக சிம்பு திருமணம் செய்துக் கொண்டால் தான் இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வரும் என்றும் அதுவரை அவர் அந்த பாடலையும் 9ம் நம்பரையும் விடமாட்டார் போல என ட்ரோல் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement