• Jul 26 2025

பிக்பாஸ் 6ல் இருந்து வெளியேறிய ராபர்ட் மாஸ்டர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

உலகலாவிய ரீதியில் அதிக ரசிகர்களை கொண்ட ரியாலிட்டி ஷோ தான் பிக்பாஸ்.இந்த நிகழ்ச்சி தமிழ் தெலுங்கு ஹிந்தி என பல மொழிகளில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றது.

தற்போது தமிழில் 6வது சீசன் கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி ஒளிபரப்பாகி விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கின்றது.கடந்த சீசன்களைப்போல இந்த சீசனும் கமலே தொகுத்து வழங்குகின்றார்.


21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, நிவாஷினி என தொடர்ந்து பலர் வெளியேறி வர தற்போது இந்த வாரம் வீட்டில் இருந்து ராபர்ட் மாஸ்டர் வெளியேறியிருக்கிறார்.

மேலும் அவர் ரச்சிதாவிடம் செய்த விஷயங்கள் மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்த அதுவே குறைவான வாக்குகள் அவர் பெற காரணமாக இருந்தது.


நன்கு விளையாடக் கூடிய ஒரு நபர் இப்படி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது சிலருக்கு வருத்தத்தை  கொடுத்துள்ளது. அத்தோடு இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ராபர்ட் மாஸ்டருக்கு ஒரு வாரத்திற்கு ரூ. 1.50 முதல் ரூ. 2 லட்சம் வரை சம்பளம் பேசப்பட்டதாக சொல்லப்படுகின்றது.


இதை வைத்தே அவருக்கான சம்பளம் கொடுக்கப்படும் என்கின்றனர்.

Advertisement

Advertisement