• Jul 25 2025

நடிகர் ரஜினி தனது சொந்தக் குரலில் பாடிய பாடல் என்ன தெரியுமா?- அடடே இதுவரை தெரியாமல் போச்சே

stella / 2 years ago

Advertisement

Listen News!


தென்னிந்திய மொழிகளில் 90களில் தொடக்கம் தற்பொழுது வரை சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் தான் ரஜினிகாந்த்.இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்திருந்த அண்ணாத்த திரைப்படம் இறுதியாக வெளியாகியிருந்தது. இதனை அடுத்து ஜெயிலர் என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.

இப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்குவதோடு சன்பிக்ஸர்ஸ் இப்படத்தினை தயாரித்து வருகின்றது.இப்படத்திற்கான படப்பிடிப்பு அவ்வப்போது நடைபெற்றும் வருகின்றது.


நேற்று ரஜினி அவர்களின் பிறந்தநாள், ஆனால் அவர் வீட்டில் இல்லை, எங்கே சென்றார் என்பதும் தெரியவில்லை. அதற்கு மாறாக அவர் பேரன்களுடன் ஸ்பெஷல் தினத்தில் எடுத்த புகைப்படம் வெளியாக சமூக வலைதளங்களில் செம வைரலானது.

மேலும் ரஜினிக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் இணைந்து தமது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர்.இதனால் இன்றைய தினம் தனக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு ரஜினி தனது நன்றிகளையும் தெரிவித்தார்.

இந்த நிலையில் ரஜினி குறித்து ஒரு விடயம் வைரலாகி வருகின்றது. அதாவது ரஜினி மன்னன் திரைப்படத்தில் இளையராஜா இசையமைப்பில் உருவான அடிக்குது குளிரு என்னும் பாடலைப் பாடி இருக்கின்றாராம்.இந்த விடயத்தை கேட்ட ரசிகர்கள் இதுவரை தெரியாமல் போச்சே எனக் கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement