• Jul 25 2025

ஈரோடு மகேஷின் சொத்து மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சிகளில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும், மேலும் சில நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் ஈரோடு மகேஷ். 

அசத்தப்போவது யாரு  நிகழ்ச்சியின் மூலம் ஸ்டாண்ட் அப் காமெடியான ஆரம்பித்து  அவர் தனது திறமையால் முன்னேறி தற்போது காமெடியன், தொகுப்பாளர், நடுவர், நடிகர் என செம பிஸியாக உள்ளார்.

தமிழில் பட்டப் படிப்பை முடித்த இவர் தற்போது யூடியூபில் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் பேசிய ஏராளமான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

தமிழ் பட்டிமன்றங்கள், பல விவாத மேடைகள், நிகழ்ச்சிகள் என தமிழுக்காகவே பங்குபெற்றவர் மகேஷ்.மேலும் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியின் மூலம் உள்ளே வர தொடர்ந்து பணியாற்றி வருகின்றார்.

அத்தோடு விஜய் தொலைக்காட்சியில் கிடைக்கும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் ஈரோடு மகேஷ் இப்போது கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

பிரபலமான தொகுப்பாளராக இருக்கும் ஈரோடு மகேஷின் சொத்து மதிப்பு மட்டும் 1 மில்லியனுக்கு மேல் இருக்கும் என்று கூறுகின்றார்.

Advertisement

Advertisement