• Jul 25 2025

உடலைக் கட்டுக் கோப்பாக வைத்திருக்க சமந்தா சாப்பிடும் உணவுகள் என்ன தெரியுமா?- ரெகுலரா இதைப் பண்ணுவாரா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் பிரபல்யமான நடிகையாக வலம் வருபவர் தான் சமந்தா. சினிமாவில் ஆரம்பமாகிய புதிதில் சுமாரான படங்களில் நடித்து வந்தாலும் பின்னர் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து பிரபல்யமானார்.தற்பொழுது கதாப்பாத்திரங்களுக்க முக்கியத்துவமுள்ள கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கம் திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

இதற்கு இடையில் அவரது உடல்நிலை மோசமாக கேமரா பக்கமே வராமல் இருந்தார். இப்போது குணமாகி மீண்டும் சினிமாவில் வெற்றிகரமாக ரவுண்ட் வர ஆரம்பித்துள்ளார்.எல்லா நாட்களும் சமந்தா காலை உணவாக எடுத்துக்கொள்வது நிறைய பழங்கள், ஓட்ஸ், நட்ஸ், ஒரு கிளாஸ் ஸ்மூத்தி மற்றும் சிறுதானியங்கள்.


மதிய உணவாக எண்ணெய் சேர்க்காமல் வறுக்கப்பட்ட சிக்கன், சாலட், பிரவுன் ரைஸ் மற்றும் வேகவைத்த காய்கறிகள் சாப்பிடுவாராம். மாலை மற்றும் இரவு க்ரீன் டீ மற்றும் ஒரு கிளாஸ் ஸ்மூத்தி ஆகியவை மாலையில் எடுத்துக் கொள்வாராம்.


இரவு ஒரு கப் குயினோவா மற்றும் மீன் உணவை உட்கொள்வாராம். ஜிம்மில் ஒரு நாளைக்கு மொத்தம் 2 மணி நேரம் செலவழிக்கிறாராம். அதில் எடை தூக்கும் பயிற்சி மற்றும் கார்டியோ பயிற்சிகளை தவறாமல் செய்கிறாராம்.இரவு நேரத்தில் சைக்கிளிங் செல்வதும் சமந்தா வழக்கமாக வைத்திருக்கிறாராம். இவ்வாறு தான் தனது உடலை கட்டுக் கோப்பாக வைத்துள்ளாராம் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement