• Jul 24 2025

மீனாவை பிடிக்கும் என்ற சொன்ன நடிகருக்கு அவர் என்ன பதில் சொன்னார் தெரியுமா..? ஷாக்கான ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

1980 களில் குழந்தை நட்சத்திரமாகியவர் தான் நடிகை மீனா. இவர் இதனைத் தொடர்ந்து என் ராசாவின் மனசினிலே என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். 90களில் ரஜினி, கமல், அஜித் ,பார்த்திபன் எனப் பல நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கின்றார்.


தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கு, ஹிந்தி மலையாளம் போன்ற மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பின்னர் பின்னர் கதாநாயகியாகவும்  களமிறங்கினார்.தெலுங்கில் 1990 ஆம் ஆண்டு 'நவயுகம்' என்கிற படத்தின் மூலம் கதாநாயகி  அவதாரம் எடுத்த மீனா, அதே ஆண்டு தமிழில் ஒரு புதிய கதை என்கிற படத்தில் கதாநாயகியாக  அறிமுகமானார்.

அழகு, அமைதி, திறமை என ஒரு சேர இருந்த நடிகை மீனாவிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தது. ரஜினி - கமல் போன்ற நடிகர்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததை தொடர்ந்து அவர்களுக்கே கதாநாயகியாகவும் நடிக்க ஆரம்பித்தனர். குறிப்பாக ரஜினி - மீனா காம்பினேஷனில் வெளியான படங்கள் வசூலில் பட்டையை கிளப்பியது.



தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள மீனா, அதிகப்படியான சர்ச்சைகளில் சிக்காத பிரபலங்களில் ஒருவர். அதே போல் திரையுலகில் உள்ள அனைவருக்குமே மிகவும் மரியாதை கொடுப்பவர் என கேள்வி பட்டிருப்போம்.


இந்நிலையில் 40 ஆண்டு நிறைவு விழாவில் பிரபு தேவா சில கருத்துக்களை கூறி இருந்தார்.மீனாவை ரொம்ப பிடிக்கும்.அதாவது “மீனா ரொம்ப அழகா இருப்பாங்க..நாம அந்த காலத்தில் எப்பிடி எப்பிடியோ இருப்போம்..” எனக் கூறியதற்கு உடனே மீனா சிரித்துக்கொண்டே “உங்களை விட உங்க அண்ணாவை தான் பிடிக்கும்” என பளார் என கூறுகின்றார்.

இது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement