• Jul 23 2025

‘பிக்பாஸ்’ கவினுக்கு இப்படி ஒரு வாய்ப்பா? கமல் என்ன செய்தார் தெரியுமா?

ammu / 2 years ago

Advertisement

Listen News!

சமீபத்தில் வெளிவந்த டாடா திரைப்படம் செம்ம ஹிட் அடித்துக் கொண்டு இருக்கிறது. மேலும் டாடா இயக்குநருக்கு அடுத்த படத்திற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என்று இணையத்தில் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. 


பலரும் முதலில் ஒரு கதையை கேட்கும் போது இந்த கதையை படமாக்கினால் ஓடுமா? மக்களுக்கு பிடிக்குமா? ஹிட் ஆகுமா? என்று பல விதமாக சந்தேகப்படுகிறார்கள். டாடா படத்தின் கதையும் அப்படி ஒரு கதையாக தான் இருந்துள்ளது. 


ஆனால் கதையை கேட்பதை விட அதை இயக்கி படமாக்கிய பின்னர் அது வேற லெவலாக இருக்கும் என்பதை டாடா படம் நிரூபித்து விட்டது. இந்த கதையும் ஹிட் ஆகும் என படத்தின் இயக்குநரும் நடிகரும் ரொம்பவே  நம்பி இறங்கி இருந்தனர்.  


அவர்களில் நம்பிக்கை வீண் போகாதபடி படமும் டாப் லெவல் ஹிட் ஆகியிருக்கு. டாடாவின் வெற்றிக்கு பின்னர் நடிகர் கவினை கமல் அழைத்து பாராட்டி கவினுக்கு ஒரு பட வாய்ப்பை கொடுத்துள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. 


இதனடிப்படையில் பிக் பாஸில் இருந்து ஒருவருக்கு கமல் வாய்ப்பு கொடுத்துள்ளார் என்பது பிக் பாஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான ஒரு விடயமாக இருக்கிறது. ஒரு படத்தின் வெற்றி ஒருவருக்கு மேலும் மேலும் புதிய கதவுகளை திறக்கும் என்பது கவினுடைய வாழ்க்கையில் நிறைவேறிக்கொண்டு இருக்கிறது.


Advertisement

Advertisement