• Jul 25 2025

கனா காணும் காலங்கள் சீரியலில் களமிறங்கும் காற்றுக்கென்ன வேலி சீரியல் வெண்ணிலா- அதுவும் என்ன கதாப்பாத்திரத்தில் தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

ரசிகர்களின் பள்ளிக் காலத்தை நினைவுபடுத்தும் விதமாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய சீரியல் தான் கனாகாணும் காலங்கள். இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்திருந்தது.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இந்த சீரியலில் இரண்டாவது சீசன் தற்பொழுது டிஸ்னி பிளஸ்என்னும் பிரபல ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகியது.இதில் நடித்து வரும் ஒவ்வொரு கதாப்பாத்திரத்திற்கும் தனி ரசிகர் பட்டாளம் இருந்த நிலையில் இந்த சீரியல் இடை நிறுத்தப்பட்டது.


இப்படியான நிலையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகின்றது.மேலும் இதில் கௌதமாக நடித்து வரும் ராஜாவுக்கும் அபியாக நடித்து வரும் தீபிகாவுக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகின்றது. இருந்தாலும் தீபிகா தன்னுடைய வருங்கால கணவர் யார் என்ற விடயத்தை இன்னும் அறிவிக்கவில்லை.


இப்படியான நிலையில் இந்த சீரியலில் காற்றுக்கென்ன வேலி சீரியலில் வெண்ணிலாவாக நடித்து வரும் ப்ரியங்கா திலோத்தம்மா என்னும் காரக்டரில் நடிக்க களமிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இவர் எப்படி நடிப்பார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement