• Jul 26 2025

'சரிகமப' நிகழ்ச்சியில் வென்ற பணம் மற்றும் நிலத்தை.. மறைந்த ரமணியம்மாள் என்ன செய்தார் தெரியுமா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல பின்னணி பாடகி ரமணியம்மாள் இன்றைய தினம் காலமான செய்தி அவரது ரசிகர்களை கடும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அதாவது பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத், சந்தியா நடித்த காதல் படத்தில் இடம்பெற்ற சந்தியா வயசுக்கு வரும் பாடலில் தான் முதன் முதலில் திரையில் இவர் குரல் ஓங்கி ஒலித்தது.


இவ்வாறு பல திரைப்படங்களுக்கு பாடியுள்ள ரமணியம்மாளுக்கு மிகப்பெரிய மேடையாக ஜீ தமிழ் 'சரிகமப' நிகழ்ச்சி அமைந்து இருந்தது. அந்தவகையில் 2017-ஆம் ஆண்டு ஒளிபரப்பான சரிகமபா சீசனில் பங்கேற்று வெற்றிப் பெற்றார்.


மேலும் 43 ஆண்டு காலமாக வீட்டு வேலைகள் செய்து வாழ்க்கையை நடத்தி வந்த இவருக்கு அந்த சீசனில் மக்களிடம் இருந்து அதிகளவான ஓட்டுகள் கிடைத்தன. இதனைத் தொடர்ந்து அவருக்கு ரூ. 5 லட்சமும், 5 சென்ட் நிலமும் வழங்கப்பட்டது.


பின்னர் ரமணியம்மாள் பெயரில் பணம் மற்றும் நிலம் பதிவானது. இதன் மூலமாக தான் ஜெயித்த பணத்தை ரமணியம்மாள் தனது 7 பிள்ளைகளுக்கும் பிரித்து கொடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. அத்தோடு 5 சென்ட் நிலம் திண்டிவனம் காரில் அழைத்து செல்லப்பட்டு பத்திரப்பதிவு செய்யப்பட்டதாகவும் அவரே ஒரு நிகழ்ச்சியில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement