• Jul 25 2025

விக்னேஷ் சிவன் பிறந்தநாளில் பிரதீப் ரங்க நாதன் கொடுத்த அன்புப் பரிசு என்ன தெரியுமா?- வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!


கடந்த 2012 ஆம் ஆண்டு சிம்பு மற்றும் வரலட்சுமி நடிப்பில் வெளியான போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரை உலகில் களம் இறங்கியவர் தான் விக்னேஷ் சிவன். அதன் பிறகு இவர் இயக்கத்தில் வெளியாகி ஹிட்டான திரைப்படம் தான் நானும் ரவுடிதான்.


நானும் ரவுடிதான் திரைப்படத்தில் மலர்ந்த விக்னேஷ் சிவன், நயன்தாரா காதல், கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணத்தில் வந்து முடிந்தது. இறுதியாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படம் வெளியானது.


வாடகை தாய் மூலம் இரு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்து கொண்ட விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஜோடி மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் இந்நிலையில், தந்தையாக தனது முதல் பிறந்த நாளை நேற்றைய தினம் தனது குடும்பத்துடன் இணைந்து கொண்டாடி இருந்தார். இது குறித்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.


இதனை அடுத்து நேற்றைய தினம் இயக்குநர் பிரதீப் ரங்கநதன் விக்னேஷ் சிவனைச் சந்தித்து பிறந்த நாள் பரிசாக பேரீச்சைப் பழங்களைக் கொடுத்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement