• Jul 24 2025

'லவ் டுடே' பட நடிகை இவானா முடி வளர்ச்சிக்கு என்ன செய்கிறார் தெரியுமா? அட இது தானா?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

ஒரே ஒரு படம் தான், ஒரே இரவில் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படும் நாயகியாக மாறியவர் இவானா. 

23 வயதாகும் இவர் 2012ம் ஆண்டு மாஸ்டர்ஸ் என்ற மலையாள படத்தில் நடிக்க தொடங்கியுள்ளார். அதன்பிறகு இரண்டு மலையாள படங்களில் நடித்த இவர் நாச்சியார் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்தார்.

லவ் டுடே என்ற படத்தில் நாயகியாக நடித்த இவருக்கு பெரிய அளவில் ரீச் கிடைத்தது. தொடர்ந்து நிறைய படங்கள் கமிட்டாகி நடித்து வருகிறார்.

வீட்டிலேயே தயாரித்த மூலிகை எண்ணெண்யை தான் தலையில் வாரத்திற்கு 2 முறை அப்ளை செய்வாராம்.

தலையை வாஷ் செய்யும் போது கட்டாயம் 2 வகையாக ஹேர் பேக்கை போடுவாராம். தயிர், கற்றாழை ஜெல், சின்ன வெங்காய சாறு சேர்ந்து நன்கு மிக்ஸ் செய்து அந்த பேஸ்ட்டை ஹேர் பேக்காக பயன்படுத்துவாராம்.

முடி வளர்ச்சிக்கு செம்பருத்தி இலை, ஊற வைத்த வெந்தயம் சேர்த்து நன்கு அரைத்து அதை முடி முழுவதும் பூசி 30 நிமிடம் கழித்து ஹேர் வாஷ் செய்வாராம்.

சருமத்திற்கு இவானா 2 வேளை  ஜுஸ், நிறைய பழங்கள் போன்றவற்றை தான் எடுத்து கொள்வாராம்.

Advertisement

Advertisement