• Jul 23 2025

பிரபாஸின் ப்ராஜெக்ட் கே படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடிக்க என்ன காரணம் தெரியுமா?- இப்படியொரு மாஸ்டர் பிளான் இருக்கா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் பிரபாஸ் பான் இந்தியா ஸ்டார் என்று சொல்லப்பட்டாலும், பாகுபலி படத்திற்கு பிறகு அவர் நடித்த பெரிய பட்ஜெட் படங்களான சாஹோ, ராதே ஷ்யாம் மற்றும் சமீபத்தில் வெளியான ஆதிபுருஷ் படங்கள் டோலிவுட்டை தவிர வேறு எங்கேயும் ஓடவில்லை. அதன் காரணமாகவே ப்ராஜெக்ட் கே படத்தில் பாலிவுட் நடிகர்களான அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி என பலரையும் இயக்குநர் நாக் அஸ்வின் இந்த படத்தில் களமிறக்கினார்.

மற்ற இடங்களை விட நடிகர் பிரபாஸின் ஸ்டார்டம் தமிழ்நாட்டில் சுத்தமாக எடுபடவே இல்லை என்பதற்கு சமீபத்தில் வெளியான ஆதிபுருஷ் படம் தான் பெரிய உதாரணம். இந்தி பெல்ட்டில் கூட படம் வெளியாவதற்கு முன்னதாக ப்ரீ புக்கிங் நன்றாகவே இருந்தது. படம் வெளியாகி பல்லை காட்டிய நிலையில், தான் ரசிகர்கள் டிக்கெட்டுகளை கேன்சல் செய்ய ஆரம்பித்தனர்.


இந்நிலையில், தெலுங்கு ரசிகர்களை மட்டும் பிரபாஸின் ப்ராஜெக்ட் கே கவரும் என்பது உறுதியான நிலையில், இந்தி பெல்ட்டில் வசூல் குவியவும் பாலிவுட் பிரபலங்கள் உள்ளனர். ஆனால், தமிழ்நாட்டு ரசிகர்களை கவர என்ன வழி என்று தேடிய நிலையில், தான் வியாபாரத்திற்காக கமல்ஹாசனை இந்த படத்தில் உள்ளே கொண்டு வரும் திட்டம் போடப்பட்டு இருப்பதாக பேச்சுக்கள் அடிபட தொடங்கி உள்ளன.

தமிழ்நாடு மட்டுமின்றி ஓவர்சீஸ் ரசிகர்களையும்  கமல்ஹாசனின் விக்ரம் படம் மிகப்பெரிய அளவில் கவர்ந்தது. இந்நிலையில், பிரபாஸுக்கு எதிராக கமல்ஹாசனை களமிறக்கினால், கண்டிப்பாக மிகப்பெரிய வசூல் வேட்டையை ப்ராஜெக்ட் கே படத்தை வைத்து கல்லா கட்டலாம் என்கிற திட்டம் தான் காரணம் என்கின்றனர்.


 இந்தியன் 2 திரைப்படம் வேறு ரிலீஸ் ஆனால், கமல் மார்க்கெட் மீண்டும் உச்சத்துக்கு சென்று விடும் என்பதை பக்காவாக கால்குலேட் செய்து தான் இயக்குநர் நாக் அஸ்வின் உலகநாயகனை ப்ராஜெக்ட் கே உள்ளே கொண்டு வந்து இருக்கிறார் என்றும் கூறப்படுகின்றது.


Advertisement

Advertisement