• Jul 24 2025

உயிருக்காக போராடிய கல்லூரி மாணவன்.. மருத்துவமனைக்கு விரைந்த ராகவா லாரன்ஸ்.. என்ன செய்துள்ளார் தெரியுமா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

நடன இயக்குநர், நடிகர், இயக்குநர் என பன்முகத்தன்மை கொண்ட நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் தற்போது 'ருத்ரன்' படம் தயாராகி இருக்கின்றது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் உருவாகும் இப்படமானது ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாகவுள்ளது.


ராகவா லாரன்ஸ் நடிப்பில் மட்டுமன்றி பிறருக்கு உதவும் நல்ல மனப்பான்மை உள்ள ஒருவராகவும் விளங்கி வருகின்றார். அந்தவகையில் எளிய மக்களுக்கும் மாற்று திறனாளிக்கும் பல உதவிகளை தொடர்ந்து செய்துகொண்டு இருக்கிறார்.


இந்நிலையில் கல்லூரி மாணவன் ஒருவர் விபத்தில் சிக்கி, மருத்துவமனையில் உயிருக்காக போராடியிருக்கிறார்.மருத்துவத்திற்கு பணம் இல்லாமல் தவித்துக்கொண்டிருந்த அந்த மாணவனின் உடைய தாயின் பரிதாப நிலைமையை பிரபல பத்திரிகையாளர் மூலம் அறிந்துகொண்ட லாரன்ஸ் உடனடியாக அவருக்கு உதவி செய்திருக்கின்றார்.


அதுமட்டுமல்லாது மருத்துவமனைக்கு நேரில் சென்று அம் மாணவனைப் பார்த்துள்ளார். மேலும் விபத்தில் சிக்கிய மாணவனின் மருத்துவ செலவை அனைத்தையும் அவரே ஏற்றுக்கொண்டு, அந்த மாணவனின் உயிரையும் காப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement