• Jul 23 2025

விஜய்யின் படப்பிடிப்பில்... சிம்ரனால் கடுப்பான எஸ்.ஏ.சி.. உடனே என்ன செய்தார் தெரியுமா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதைக் கொள்ளையடித்த ஒரு இயக்குநரே எஸ்.ஏ.சந்திரசேகர். இவர் இயக்குநர் மட்டுமல்லாது நடிகர் தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்ட ஒருவராகவும் விளங்கி இருக்கின்றார்.


அதுமட்டுமல்லாது இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்யின் மகன் என்பதும் நம் அனைவருக்கும் தெரியும். இவருடைய இயக்கத்தில் பல படங்களில் நடித்துத்தான் விஜய் இன்று டாப் நாயகனாக திகழ்ந்து வருகின்றார். 


அவ்வாறான படங்களில் ஒன்று தான் 'ஒன்ஸ் மோர்' திரைப்படம். இப்படத்தில் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் இணைந்து விஜய் நடித்து அசத்தியிருப்பார். அத்தோடு இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார்.


இந்நிலையில் இப்படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று தற்போது வெளியாகி இருக்கின்றது. அதாவது இப்படத்தின் உடைய படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த நேரத்தில், அந்த இடத்திற்கு சிம்ரன் ஒரு நாள் தாமதமாக வந்துள்ளார்.


இதனால் கடுப்பான விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி உடனடியாக படப்பிடிப்பை Pack அப் செய்துவிட்டாராம். அந்த அளவிற்கு மிகவும் ஸ்ட்ரிக்ட்டான இயக்குநராக இருந்திருக்கின்றார் எஸ்.ஏ.சி. 

Advertisement

Advertisement